2016ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் 5013 பணியிடங்கள் நிரப்பப்படும்: அருள்மொழி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2016

2016ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் 5013 பணியிடங்கள் நிரப்பப்படும்: அருள்மொழி

2016 ஆம் ஆண்டில் தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5,513 பணியிடங்க‌ள் வரும் ஆண்டில் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டிற்கான திட்ட அறிக்கையை தேர்வாணையத்தின் தலைவர் கே.அருள்மொழி இன்று (ஜன.29) வெளியிட்டார்.அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:


தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5,513 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு முதல்முறையாக சுற்றுலா வளர்ச்சித்துறையில் 5 அதிகாரி பணியிடத்தில் 5 காலியிடங்களும், எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. குருப் 3 பிரிவில் நேர்காணல் இல்லாத பணியில் 36 பணியிடமும், குருப் 4 பிரிவில் 4,931 காலியிடங்கள் என 5,513 பணியிடங்கள் நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய 9 தேர்வுகள் கனமழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டன. அவற்றிக்கான தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பதவி ஏற்றது முதல் 3 மாதங்களில் 12 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, 6 ஆயிரத்து 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று கூறினார்.மேலும், இந்த ஆண்டு குருப் 1 பிரிவில் 29 துணை ஆட்சியர் பணியிடங்களும், 8 வணிகவரித்துறை உதவி ஆணையர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், 1 மாவட்டப் பதிவாளர் உட்பட 45 பணியிடங்களும், 65 உதவி சிறை அலுவலர் பணியிடமும், வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியில் 172 பணியிடமும்நிரப்பப்பட உள்ளன.

இந்த ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் அடங்கிய குருப் 2 தேர்வில் நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகள் என பல்வேறு காலியிட விவரங்கள் வர வேண்டி உள்ளது என்று கூறினார்.மேலும், புதிய திட்ட அறிக்கையை விவரங்களை அறிய தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

1 comment:


  1. வி.ஏ.ஓ ( VAO) தேர்வில் 25க்கு 25 மதிப்பெண் முழுமையாக பெற ஸ்ரிராம் கோச்சிங் சென்டரின் வி.ஏ.ஓ கைடு..

    பாடத்திட்டம் பின்வருமாறு:

    1. கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிநியமன விதிகள், பணிகள் மற்றும் கடமைகள்

    2. அ.பதிவேடு, பட்டா, சிட்டா, அடங்கல்

    3. நிலஅளவை, நிலவரித்திட்டம்,

    4. நிலவரிவசூல்
    வருவாய்பதிவு மாற்றங்கள் முறைகள், நிலஉரிமையை விட்டுக்கொடுத்தல்

    5.நிலச் சீர்திருத்தம்
    குடிவாராச் சட்டங்கள்

    6. வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி), இனாம்கள

    7. நிலக்குத்தகை, நிலஒப்படை மற்றும் வீட்டுமனை ஒப்படை.

    8. புதையல்.

    9. கிராமநிர்வாக அலுவலரின் முக்கியப் பணிகள்.

    10. விபத்து நிவாரணத் திட்டம்.

    11. சாவடிகளைப் பராமரித்தல்.

    12. நிலமாற்றம்
    நிலஎடுப்பு

    13. பாசன ஆதாரங்கள் தண்ணீர் தீர்வை முறைகள்

    14.பேரிடர் மேலாண்மை,

    15. நிவாரணப் பணிகள்,

    16.அரசு நிலங்களில் ஆக்ரமணங்களை அகற்றும் நடைமுறைகள்

    இருப்புப் பாதைகள்

    17. கொலை, தற்கொலை, அசாதாரணமரணம் நிகழும்போது கிராமநிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

    18. பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்

    19.ஓய்வூதியத் திட்டங்கள்

    20.தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்

    21. விழாக்கள் மற்றும் பொது அரசுவிழாக்களின் போது

    22.சான்றுகள் வழங்குவதில் கிராமநிர்வாக அலுவலரின் கடமைகள்

    23.வனப்பகுதி மற்றும் ஆதாரங்களை பாதுகாப்பதன் முக்கியக் கூறுகள்

    24.கால்நடைப்பட்டி

    25. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்

    இந்த புக்கின் கூரியர் விலை உட்பட 400ரூபாய் மட்டும்... ஸ்டாக் உள்ளவரை மட்டுமே

    தொடர்புக்கு
    நிறுவனர் 86789 13626 ..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி