வங்கிகள் 3 நாட்கள் இயங்காது: வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2016

வங்கிகள் 3 நாட்கள் இயங்காது: வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவிப்பு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (ஜன.8) ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஜனவரி 8, ஜனவரி 9 (இரண்டாவது சனிக்கிழமை), ஜனவரி 10 (ஞாயிறு) ஆகிய மூன்று நாள்கள் தொடர்ந்து வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.


காரணம் என்ன?


வங்கி ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு, பணிச் சலுகை ஆகியவை தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகளின் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளை கைவிடக் கோரி நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.


சட்டத்துக்கு முரணாக...:


கடந்த ஆண்டு மே மாதத்தில் அனைத்து வங்கிகளுக்கும் புதிய ஊதிய உயர்வு, பணிச்சலுகை தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டது.ஆனால் ஒப்பந்த ஷரத்துகளை மீறி பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளான,"ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்', "ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்',"ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர்', "ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்', "ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா' ஆகிய 5 வங்கிகளின் நிர்வாகங்கள் புதிய பணி முறைகளை வாபஸ் பெறக் கோரி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது என்று வெங்கடாசலம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி