தமிழக பட்டு வளர்ச்சித் துறையில் 300 ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2016

தமிழக பட்டு வளர்ச்சித் துறையில் 300 ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக பட்டு வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள உதவி பட்டு ஆய்வாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டு வளர்ப்பு தொடர்பான செய்முறை பயிற்சி அனுபவத்தை அரசு பட்டு வளர்ச்சி பயிற்சி நிறுவனங்களில் பெற்றவர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்: 01/2016


பணி: உதவி பட்டு ஆய்வாளர்

காலியிடங்கள்: 43

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 - தர ஊதியம் ரூ.4,200

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தாவரவிய்ல, விலங்கியலை முதன்மை பாடமாகக் கொண்டு பி.எஸ்சி பட்டம் பெற்று பட்டு வளர்ப்பில் 6 மாதங்களுக்கு குறையாமல் செயல்முறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டு வளர்ப்பில் முதுகலை பட்டயப் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


பணி: இளநிலை பட்டு ஆய்வாளர்காலியிடங்கள்: 257

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400


வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: பள்ளியிறுதி வகுப்பில் பொது அறிவியலை ஒரு பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டு வளர்ப்பில் 6 மாதங்களுக்கு குறையாமல் செயல்முறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஓசூர், அரசு பட்டு பயிற்சிப் பள்ளியில் பட்டதாரி அல்லாதவர்களுக்கான 6 மாத பட்டு வளர்ப்பு பயிற்சியினை வெற்றிகரமாக பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.


விண்ணப்பிக்கும் முறை: www.sericultureexam.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:இயக்குநர், தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை, சேலம்-7


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2016


ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 28.01.2016


தேர்வு நடைபெறும் தேதி: 07.02.2016


மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sericultureexam.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி