6-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தவறான கணக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2016

6-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தவறான கணக்கு

தமிழகத்தில் 6-ம் வகுப்பு கணி தப் பாடப் புத்தகத்தில் தவறுதலான ஒரு கணக்கு 3 ஆண்டுகளாக வெளியாகி வருகிறது. பிழையை நீக்குமாறு, தொடர்ந்து போராடி வருகிறார் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஒருவர்.கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை அடுத்த முத்தலக்குறிச் சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலை மையாசிரியர் மரிய அமிர்தராஜ் கூறியதாவது:


6-ம் வகுப்பு கணிதப் பாடநூலில், முதல் பருவம், தொகுதி 2-ல், 27-ம் பக்கத்தில், `மீச்சிறு பொது மடங்கு’ என்ற பாடத்தில் இந்தத் தவறு உள்ளது. அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு, தவறான விடைகளை அதற்கு அடுத்த பக்கத்தில் வெளியிட்டு, அதற்கான தவறான விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளது.


தவறை திருத்தக் கேட்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், பாட நூல் தயாரிப்புக் குழு ஆகியோ ருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இதுவரை எந்த பதிலும் வர வில்லை. கடந்த 2011 முதல் இதே பாடத் திட்டம் தவறாகவே வெளியாகி வருகிறது. வரும் ஆண் டுக்கான பாட நூலைஇப்போது தயார் செய்வார்கள். அதில் இத்தவறை திருத்தி வெளியிடச் செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி