ஆசிரியர்கள் போராட்டம் இன்று துவக்கம் வகுப்புகள் முடங்கும் அபாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2016

ஆசிரியர்கள் போராட்டம் இன்று துவக்கம் வகுப்புகள் முடங்கும் அபாயம்

ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், மூன்று நாட்களுக்கு, தமிழகம் முழுவதும் ஆசிரியர் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' சார்பில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதனால், பிப்., 1ல் அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று துவங்கி, வரும் திங்கள் வரை நீடிக்கும், ஜாக்டோ அமைப்பினர் நடத்தும் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்படுவர்.


போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள், சனி, ஞாயிற்றுக் கிழமை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, தேர்தல் பணியிலும் ஈடுபட மாட்டார்கள். போராட்டத்தின், மூன்றாவது நாளான பிப்., 1 பள்ளி வேலை நாள்.

தமிழகம் முழுவதும், 70 சதவீத ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் நடத்த உள்ளதால், அன்று வகுப்புகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.அரசு கிடுக்கிப்பிடி வகுப்புக்கு வராமல் போராடும் ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்' போட்டு, ஒரு நாள் சம்பளப் பிடித்தம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.'தற்செயல் விடுப்பு கடிதம் கொடுத்தால் அதை ஏற்கக் கூடாது; போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்களின் பட்டியலை அரசுக்கு தொகுத்து அனுப்ப வேண்டும்' என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மாற்று ஏற்பாடு என்ன? பிப்., 1ல், பள்ளிகளுக்கு முழுக்கு போட்டு விட்டு, ஆசிரியர்கள் மறியல் செய்யச் சென்றால், வகுப்புகள் முடங்கி விடும்.

எனவே, அந்த நாளில் அனைவருக்கும் கல்வி இயக்ககமான எஸ்.எஸ்.ஏ.,வில் பணியாற்றுபவர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மதிய உணவு திட்டத்தில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மூலம் வகுப்புகளை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.தொடர் போராட்டம் நடத்தும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை, அரசு அழைத்து பேசுவதுடன், வாக்குறுதி அளித்த கோரிக்கைகளை உடனடியாக, தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடையும்.

9 comments:

  1. In our school there are more than 5 regular teachers and 3 part time teachers ...so we could manage i think....as a teacher i will not act against the government n life of the students going to face the public exam.

    ReplyDelete
    Replies
    1. Poorattathil teachers win panni athil engalukku benefit vanthal athanai neeinga accept pannama I support only govt so I don't accept nu solluvingala

      Delete
    2. I never act against my conscience and government ....whatever may be the ruling party...To me we are only the employees of government ...still there are many qualified teachers working in private schools for poor salary...so what's the need for protesting..........

      Delete
    3. Ungalukku pasikuthunu unga veetula irukkaravaingalukku yaeppadi theyrium onnu neeinga veenum nu kaekanum or illana avaingala kudukkanum appadi thaana ippo govt teachers ku govt correct seiya vaendiyatha seiyala so govt teachers avainga rights kaekarainga

      Delete
    4. Private teachers qualified irukkainga nu solluringa ok govt teachers yarum private teachers ku koraichavainga kidaiyathu

      Delete
    5. Private teachers qualified irukkainga nu solluringa ok govt teachers yarum private teachers ku koraichavainga kidaiyathu

      Delete
    6. Ungalukku pasikuthunu unga veetula irukkaravaingalukku yaeppadi theyrium onnu neeinga veenum nu kaekanum or illana avaingala kudukkanum appadi thaana ippo govt teachers ku govt correct seiya vaendiyatha seiyala so govt teachers avainga rights kaekarainga

      Delete
  2. அய்யா இங்கிலிஷ் BT உனக்கென்ன?9300+4600 வாங்குற...அதான் இப்படி பேசுற....5200+2800 வாங்குற எனக்குத் தெரியும் ...எங்க இழப்பு மற்றும் வலி என்னன்னு...போய் புடவை இருந்தா கட்டிக்கிட்டு மூலைல படுத்து தூங்கு

    ReplyDelete
  3. கருங்காலி english b.t நீயெல்லாம் டீச்சர் வேலைக்கு லாயக்கு இல்லாதவன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி