தங்கம் வென்றதமிழக சிறுவன்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2016

தங்கம் வென்றதமிழக சிறுவன்!

தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த ரித்திக், தங்கம் வென்று சாதனை படைத்தான்.சென்னையை சேர்ந்தவர் ரமேஷ்; எலக்ட்ரீசியன்.
அவரது மகன் ரித்திக், 14. கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறான். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்துாரில், தேசிய துப்பாக்கி சுடும் போட்டி, 2015 டிச., 27ல் நடந்தது.


இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான, துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற ரித்திக், தங்கம் வென்றான்.ரித்திக்கை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் பாராட்டினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி