சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரியின், மனித உரிமைகள் துறையுடன் இணைந்து, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி,ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் உள்ளிட்டோர் முக்கிய விருந்தினராக பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் ராஜேஷ் லக்கானி பேசியதாவது: நேர்மையான தேர்தல் நடத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. முறைகேடு புகார்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கவும், படங்கள் எடுத்து அனுப்பவும், 'பேஸ் புக், வாட்ஸ் ஆப்' வசதி அறிமுகம் செய்யப்படும். மாணவர்கள், என் அலைபேசி எண்ணுக்கே, 'வாட்ஸ் ஆப்'பில் புகார்அனுப்பலாம். ஆனால், தவறான தகவல் தர வேண்டாம்.தேர்தல் நாளில் வீட்டிலிருந்து, 'டிவி' பார்த்து கொண்டிருக்காமல், முதலில் ஓட்டை பதிவு செய்யுங்கள். மாணவியர், இளைஞர்கள் அனைவரும், தேர்தல் துறையின் துாதராக, தலைமை தேர்தல் அதிகாரியாக நினைத்து, நேர்மையான தேர்தல், ஓட்டு போடுவதன் அவசியத்தை, குடும்பத்தில், அக்கம் பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் அதிகாரி மிக நேர்மையாகவும்,கண்டிப்பாகவும் செயல்பட்டால் தேர்தல் நியாயமாக நடக்கும்.
ReplyDelete