வேலைவாய்ப்பு குறைவு என கல்விக் கடன் மறுப்பதா: உயர்நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2016

வேலைவாய்ப்பு குறைவு என கல்விக் கடன் மறுப்பதா: உயர்நீதிமன்றம் உத்தரவு.

'பி.இ.,(சிவில்) படிப்பிற்கு வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது எனக்கூறி வங்கி நிர்வாகம் கல்விக் கடன் நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, ' என, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை தமிழ்ச்செல்வம் தாக்கல் செய்த மனு :என் மகன் மதுரை சேது பொறியியல் கல்லுாரியில் பி.இ.,(சிவில்) முதலாம் ஆண்டு படிக்கிறார்.


கல்விக் கடன் ௩ லட்சத்து ௧௦ ஆயிரத்து ௨௦௦ ரூபாய் வழங்கக் கோரி, மதுரை நாராயணபுரம் ஸ்டேட் வங்கி கிளையில் விண்ணப்பித்தோம். கிளை மேலாளர் நிராகரித்தார். அதை ரத்து செய்து, கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, தமிழ்செல்வம் மனு செய்திருந்தார்.நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவு: மனுதாரர் மகன் சேர்ந்துள்ள படிப்பிற்கு வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது எனக்கூறி கல்விக்கடன் நிராகரித்தது நியாயமற்றது. கடனை திருப்பிச் செலுத்த ஜாமின் உத்தரவாதம் அளிக்கவும், வங்கி விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக வசதி வாய்ப்பற்றவர்களின் கல்வி பாதிக்கப்படாமல், படிப்பைத் தொடர வேண்டும் என்ற நோக்கில் கல்விக் கடன் திட்டம் கொண்டு வரப்பட்டது. கல்விக் கடன் மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுவை பரிசீலித்து, கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மனுதாரர் வழக்கறிஞர் டி.ரமேஷ்குமார் ஆஜரானார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி