இராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை பள்ளி தலைமைஆசிரியர்கள்அச்சம்! பாதுகாப்பு இல்லாததால் தொடரும் திருட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2016

இராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை பள்ளி தலைமைஆசிரியர்கள்அச்சம்! பாதுகாப்பு இல்லாததால் தொடரும் திருட்டு

திருவாடானை பகுதிகளில் அரசு பள்ளிகளில் பாதுகாப்பு இல்லாததால் மர்ம நபர்கள் கம்ப்யூட்டர்களை திருடி வருகின்றனர். இதனால் தலைமை ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.திருவாடானை, தொண்டி, மங்கலக்குடி, பாண்டுகுடி, எஸ்.பி. பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 7 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.


ஒவ்வொருபள்ளியிலும் தலா 800 முதல் 1,500 மாணவர்கள் வரை படிக்கின்றனர். இந்த பள்ளி களில் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்தவெளியாக உள்ளது.இரவுநேர காவலர்களும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் மர்மநபர்கள் பள்ளி வளாகத்திற்குள் சென்று மது அருந்துவது, திருடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.பாண்டுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் டிச., 30 இரவு வகுப்பறை கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் 7 கம்யூட்டர்கள், நகர் எடுக்கும் இயந்திரம், புரஜக்டர் , மைக் உட்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர். ஏற்கனவே ஆனந்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் திருடு போனது. தொடர்ந்து அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை திருடி வருவதால் மற்ற பள்ளி தலைமை ஆசிரியர் களும் அச்சம் அடைந்துள்ளனர்.


தலைமைஆசிரியர்கள் கூறிய தாவது: பாண்டுகுடி அரசு பள்ளியில் ஒரு வாரத்திற்கு முன்பு தான் 30 லேப்டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இதனால் லேப் டாப்கள் தப்பின. சில மாதங்களுக்கு முன் ஆனந்தூர் அரசு மேல்நிலை பள்ளியிலும் கம்யூட் டர்கள் திருடுபோனது. திருடு போகும் கம்ப்யூட்டர்களுக்கு நாங்களே பொறுப்பு ஏற்க வேண்டியுள்ளது. சுற்றுச்சுவர் கட்டவும், இரவு காவலாளிகளை நியமிக்கவும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி