பானை மீது நடனம்: கின்னஸ் சாதனை படைத்த சேலம் பள்ளி மாணவிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2016

பானை மீது நடனம்: கின்னஸ் சாதனை படைத்த சேலம் பள்ளி மாணவிகள்

சேலம் க்ளூனி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 483பேர் பானை மீது நின்று பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.பள்ளி வளாகத்தில் இன்று பானையின் மீது நின்று இறைவணக்கம், பாரதியாரின் பாரத சமுதாயம் வாழ்கவே ஆகிய பாடல்களுக்கு 483 மாணவிகளும் ஒரு சேர சரியாக 6.4 நிமிடங்கள் பரதநாட்டினம் ஆடினர்.


இந்த சாதனைக்காக 2ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள், நடன ஆசிரியை லதா மாணிக்கம் பயிற்சியின் கீழ்கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.உலகிலேயே மிக அதிகமான நபர்கள், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பானை மீது நடனம் ஆடிய நிகழ்வு என்ற வகையில் இந்த சாதனைஉலக கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி