சத்துணவு ஊழியர் பிரச்னை தீரவில்லை உணவு வழங்குவதை நிறுத்த முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2016

சத்துணவு ஊழியர் பிரச்னை தீரவில்லை உணவு வழங்குவதை நிறுத்த முடிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 சத்துணவு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெறாததால், தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 மாதங்களில் 23 சத்துணவு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதன்பின் சிலரது'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டனர்.


இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளரை (சத்துணவு) இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டஊழியர்கள் டிச., 14 ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.பின் நிர்வாகிகளுடன் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சத்துணவு ஊழியர்கள் மீதான நடவடிக்கை டிச., 28 க்குள் ரத்து செய்யப்படும் என, உறுதியளிக்கப்பட்டது. இதுவரை உறுதியளித்தப்படி கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில்ஈடுபட சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.சத்துணவு ஊழியர் சங்க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஏ.முருகேசன்கூறியதாவது: நான்கு பேருக்கு 'சஸ்பெண்ட்' உத்தரவும், 17 பேரின்இடமாறுதல் உத்தரவும் ரத்து செய்யப்படவில்லை. ஜன., 8 ல் திருப்பூரில் நடக்கும் மாநில மாநாட்டிற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் மாநாட்டில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தும் போராட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி