பள்ளி மாணவர்கள் ஜங்க் உணவுகளை கொண்டு வருவதை தடுக்க கடும் சோதனை: சிபிஎஸ்இ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2016

பள்ளி மாணவர்கள் ஜங்க் உணவுகளை கொண்டு வருவதை தடுக்க கடும் சோதனை: சிபிஎஸ்இ

பள்ளி மாணவர்கள் ஜங்க் உணவு வகைகளைக் கொண்டு வருவதையும்,பள்ளி கேன்டீன் மற்றும் 200 மீட்டர் பரப்பில் ஜங்க் உணவுகள் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து சிபிஐஎஸ் பள்ளிகளுக்கு நிர்வாகம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.


பள்ளி மாணவர்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை பரிசோதித்து, அவை உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுதான் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு சிபிஎஸ்சி நிர்வாகம்கூறியுள்ளது.அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை போன்றவை அதிகம் இருக்கும் உணவு பொருட்கள் காரணமாக இரண்டாம் நிலை நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் மாணவர்களுக்கு ஏற்படக் காரணமாக இருக்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், பள்ளி கேன்டீன்களிலும் ஜங்க் உணவுகள் விற்பதை தடுக்கவும், சுகாதாரமான உணவுகள் விற்பனை செய்வதை உறுதி செய்யவும், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உட்பட 10 பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி