திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள், புதிய கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு, மாற்றப்பட்டுள்ளன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2016

திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள், புதிய கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு, மாற்றப்பட்டுள்ளன.

மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள், புதிய கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு, மாற்றப்பட்டுள்ளன. கல்வித்துறைக்கு, ஐந்தாவது தளம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதன்மைகல்வி அலுவலகம், திருப்பூர் கே.எஸ்.சி., அரசு பள்ளி வளாகத்திலும்; மாவட்ட தொடக்ககல்வி அலுவலகம், பழைய நகர்மாநகராட்சி பள்ளி வளாகத்திலும் செயல்பட்டன. வாலிபாளையம் மாநகராட்சி பள்ளி மேல்மாடியில், மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டது.


கல்வித்துறைக்கு என, தனியாக கட்டட வசதி இல்லாததால், பல ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட அறைகளை அபகரித்து, கல்வித்துறை அலுவலகங்கள் செயல்பட்டன. போதிய இடவசதி இல்லாததால் ஆவணங்கள், பதிவேடுகளைசரிவர பராமரிக்க முடியாமல் ஊழியர்கள் அவதிப்பட்டனர். தற்போது, ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தில், கல்வித்துறைக்கு அறை ஒதுக்கப்பட்டதால், அலுவலகங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஐந்தாவது தளத்தில், 501, 502, 503 மற்றும், 504 ஆகிய அறைகள், மாவட்ட கல்வித்துறை அலுவலகமாக செயல்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி