வாடகை வீட்டில் குடியிருக்க விரும்பாத அரசு ஊழியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2016

வாடகை வீட்டில் குடியிருக்க விரும்பாத அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள், சொந்த வீடு கட்ட, தமிழக அரசு தேவையான கடன் வழங்கியதால், வாடகை வீட்டில் குடியிருக்க, அவர்கள் விரும்புவதில்லை,'' என, வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:


மார்க்சிஸ்ட் - டில்லிபாபு:

அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, வாடகை குடியிருப்பு கட்டிக் கொடுக்க அரசு முன்வருமா?வைத்திலிங்கம்: ஆறாவது ஊதியக் குழு மூலம் கிடைத்த சம்பள உயர்வு மற்றும் தமிழக அரசு வழங்கிய வீட்டுக்கடன் ஆகியவற்றால், அரசு ஊழியர்கள், சொந்த வீடு கட்டி குடியேறிவருகின்றனர். வாடகை வீட்டில் குடியிருக்க, அவர்கள் விரும்புவதில்லை. இதனால், சென்னை, கோவையைத் தவிர, பிற பகுதிகளில், அரசின் வாடகைக் குடியிருப்புகள் காலியாக உள்ளன. எனவே, புதிதாக வாடகை குடியிருப்புகள் கட்ட வேண்டிய அவசியம் அரசுக்குஏற்படவில்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி