ஊழியர்களுக்கு கட்டுப்பாடு இஷ்டத்திற்கு 'லீவ்' எடுத்தால் சம்பளம் 'கட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2016

ஊழியர்களுக்கு கட்டுப்பாடு இஷ்டத்திற்கு 'லீவ்' எடுத்தால் சம்பளம் 'கட்'

தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் டேவிதார், அனைத்து துறை செயலர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:அரசு ஊழியர்கள் பணி செய்யாமல், அனுமதிக்கப்பட்ட விடுப்பு நாள் முடிந்த பின்னும், நீண்ட விடுப்பில் இருந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணியை, ஒழுங்கு நடவடிக்கை குழு விரைவாக மேற்கொள்ள வேண்டும்.


ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்கும் முன், சம்பந்தப்பட்ட ஊழியர் பணியில் சேர விரும்பினால், அவரை அனுமதிக்கலாம்.ஆனால், ஒழுங்கு நடவடிக்கை தொடர்பானவிவரம், அரசுக்கு வர காலதாமதமாகிறது. உதாரணமாக, 1986ல் முறையாக பணிக்கு வராதவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, 2015ல் அரசுக்கு பரிந்துரை வந்துள்ளது. அந்த நபரோ, 2000ல் ஓய்வு பெற்றுவிட்டார். இது போன்ற தவறுகளை தடுக்க, விடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சலுகைகளும் ரத்தாகும்

* அரசு ஊழியர்கள், அவர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்பு எடுப்பதற்கான விதிமுறைகளைஅறிந்திருக்க வேண்டும்
* அரசு ஊழியர்கள், அனுமதிக்கப்பட்ட விடுப்பை எடுக்க விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும்
* அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டவிடுப்பு முடிந்த பின்னும், விடுப்பு எடுத்தால், அந்த நாளுக்குரிய சம்பளம் மற்றும் சலுகைகள் ரத்து செய்யப்படும்
* விடுப்பு அளிப்பது, அனுமதிப்பது தொடர்பாக சந்தேகம் என்றால், தாமதமின்றி, அரசுநிர்வாகத் துறையை தொடர்பு கொள்ள வேண்டும்
* முன் அனுமதியின்றி, அரசு ஊழியர்கள் அதிக நாள் விடுப்பு எடுத்தால், உடனடியாக, அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்
* அரசு ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன், அவர் எடுத்துள்ளவிடுப்பு மற்றும் எடுக்காத விடுப்பு விவரங்களை, அரசுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்
* அரசு ஊழியர்கள் பயிற்சி காலத்தில், மருத்துவ காரணங்களுக்காக, விடுப்பு எடுக்க அனுமதி கோரினால், 60நாட்கள் வரை விடுப்பு வழங்கலாம்.

9 comments:

  1. கல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..,

    ReplyDelete
  2. Lab assitent result eppo varum frds pls tell me

    ReplyDelete
  3. Lab assitent result eppo varum frds pls tell me

    ReplyDelete
    Replies
    1. இது சம்பந்தபட்ட வழக்கு ஒன்று மதுரையில் உள்ளது அது முடிந்தவுடன் ரிசல்ட் வரும்

      Delete
  4. Karunanidhi told if anybody get job in various department with the help of money in this govt that order will be cancelled in next govt.


    ReplyDelete
    Replies
    1. Two lakhs athigama dmk period la kodutha again join panna vaikalam nu ippavae plan pannarar

      Delete
  5. திருவிழா நடந்ததானா?....

    ReplyDelete
  6. Mutual Transfer=BT ENGLISH ,,, MELMARUVATHUR, KANCHEEPURAM DT to SALEM, NAMAKKAL, DHARMAPURI, ERODE.dt..pls contact=8012998093,7667724789......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி