TET : தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாத பள்ளி ஆசிரியருக்கும் சம்பளம்: உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2016

TET : தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாத பள்ளி ஆசிரியருக்கும் சம்பளம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

'தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாவிட்டாலும், உச்சநீதிமன்ற வழக்குமுடிவுக்கு வரும்வரை, சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியருக்கு, சம்பளம் வழங்க வேண்டும்,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


துாத்துக்குடி மேலதட்டப்பாறையில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் டி.என்.டி.டி.ஏ., துவக்கப் பள்ளி உள்ளது. இடைநிலை ஆசிரியராக 2012 ஆக.,2 ல் எஸ்தர் நியமிக்கப்பட்டார். இதை அங்கீகரிக்கக் கோரி கல்வித்துறைக்கு, பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்தது.

'ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்தர் தேர்ச்சி பெறாததால், நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது,' என கல்வி அதிகாரிகள் நிராகரித்தனர். எஸ்தர் மற்றும் பள்ளி தாளாளர், 'பணி நியமனத்தை தற்காலிகமாக அங்கீகரித்து, சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதை அனுமதித்து ஜன.,4 ல் தனிநீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், துவக்கக் கல்வி இயக்குனர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுதகுதித் தேர்வை, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தகுதியாக நிர்ணயித்துள்ளது. இதில் அரசு தலையிட முடியாது. சிறுபான்மையினர் பள்ளி, சிறுபான்மையினர் அல்லாத பள்ளி என கல்வித்தகுதியை வேறுபடுத்தி பார்க்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி கோத்ரி, எஸ்.மணிக்குமார் கொண்ட அமர்வு விசாரித்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் சண்முகநாதன், பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் ஐசக்மோகன்லால் ஆஜராயினர்.

நீதிபதிகள் :

'இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது,' என அரசு வழக்கறிஞர் கூறுகிறார். அது முடிவுக்கு வரும்வரை, பணியாற்றும் காலத்திற்குரிய சம்பளத்தை, ஆசிரியருக்கு வழங்க வேண்டும். பணியை விட்டு நீக்கக்கூடாது. பணியில் தொடர்வது என்பது, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்றனர். இதுபோல் தாக்கலான பல்வேறு வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பநீதிபதிகள் உத்தரவிட்டனர்.

20 comments:

  1. how the judgement will be please discuss. That only we will do. Already 2 yrs gone. Those who passed TET but not get the job, lost 2yrs service. Also the certificate will be valid only another 5 yrs. Already 2yrs gone.

    ReplyDelete
  2. Enter your commen


    govt accpt pannathu

    ReplyDelete
  3. சென்னையில் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற மாற்று திறனாளிகள் பணி வழங்க கோரி தொடர்ந்து 3 ம் நாளாக கூவம் நதிகரையில் உண்ணாவிரத்தெடர் போராட்டம்

    ReplyDelete
    Replies
    1. மூன்று நாட்களாக நடைபெறும் போராட்டம் பற்றி ஒரு தகவலும் இல்லை, ஊடகங்களில் கூட செய்திகள் வந்தாக தெரிய வில்லை,
      தமிழக அரசு இவர்களுக்காவது கருணை காட்டட்டும்..,

      Delete
    2. அவர்கள்ளுக்கு கூவம் நதிகரையோரம உண்ணா விரதம் இருக்க இடம் ஒதுக்க பட்டது தான் வேதனை. இன்று சன் நியுஸ் ல காட்டினங்க அருள்.

      Delete
    3. நன்றி குமார் ஐயா அவர்களே,,

      Delete
  4. பாரதி .A.d.m.k.கொள்கை பரப்ப செயலாளர் தலமையயில் .தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலை போராட்டம்

    ReplyDelete
  5. அல்லக்கை அருப்புக்கோட்டை ராஜபாண்டியும் கலந்துகொண்டு அக்கட்சியில் எம்.எல்.ஏ சீட் வேண்டி உண்ணாவிரதம் வரும் பிப்ரவரி 6...

    இந்த தடவை 2பேருக்கும் நாமம் கன்பார்ம்...

    ReplyDelete
  6. அல்லக்கை அருப்புக்கோட்டை ராஜபாண்டியும் கலந்துகொண்டு அக்கட்சியில் எம்.எல்.ஏ சீட் வேண்டி உண்ணாவிரதம் வரும் பிப்ரவரி 6...

    அடுத்த வாரம் 2பேரும் அமெரிக்கா வெள்ளை மாளிகை முன்பு போராட்டம்....அடுத்து ஐ.நா சபை...அது அவர்களின் ஐந்தாவது முயற்சி...

    ஏனெனில் கைகளின் விரல்கள் 5...
    பூதங்கள் 5...
    புலன்கள் 5...
    சாக்லெட் 5 ....
    இவங்க பின்னாடி போன நாமும் 5 - ஐந்தறிவு

    ReplyDelete
  7. இன்று நடந்த உண்ணாவிரத போராட்டம் பற்றி கூறவும்.

    ReplyDelete
  8. இன்று நடந்த உண்ணாவிரத போராட்டம் பற்றி கூறவும்.

    ReplyDelete
  9. ungaluku 6arivu erukumnu ninachen 4 kuda erukathu pola epdi neenga teaching pannuviga doubt sir

    ReplyDelete
  10. Tntet supreme court hearing details please share if anyone of knows it.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி