சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைப்பு : பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2017

சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைப்பு : பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விழுக்காடு, அரை விழுக்காடு குறைந்துள்ளது. 1 கோடி ரூபாய் வரையிலான சேமிப்புகளுக்கான வட்டியை 4 விழுக்காட்டில் இருந்து 3.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் 1 கோடி ரூபாய்க்கு குறைவாக இருப்பு வைத்திருப்பவர்கள்.

தொடர்ந்து வங்கி சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி வந்த நிலையில் வட்டி விழுக்காடு குறைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சேமிப்பு கணக்கு வட்டி விகித குறைப்பை அடுத்து கடன்களுக்கான வட்டி விழுக்காடும் விரைவில் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டார்களிடம் உருவாகி உள்ளது. இதனால் பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலை உயர ஆரம்பித்துள்ளது. சேமிப்பு கணக்குளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருப்பு வைத்திருப்பவர்களுக்கு 4 விழுக்காடு வட்டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பு இன்றே அமல்படுத்தப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி