சென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2017

சென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் (443 காலி பணியிடங்கள்), குறு அங்கன்வாடி பணியாளர் (158 காலி பணியிடங்கள்), அங்கன்வாடி உதவியாளர் 643 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வயது 25 முதல் 35 வயது வரையும், அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு 20 வயது முதல் 40 வயதுடன் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.தகுதி வாய்ந்த உள்ளூர் மகளிர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு உரிய விண்ணப்பங்களை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இணையதளமான www.icds.tn.nic.in-ல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அல்லது ‘மாவட்ட திட்ட அலுவலர், 2/124, தியாகராயா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18’ என்ற முகவரியில் அணுகலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி