மாணவர்களுக்கும் நிலவேம்புக் கஷாயம் ! 'டெங்கு' வை கட்டுப்படுத்த தீவிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2017

மாணவர்களுக்கும் நிலவேம்புக் கஷாயம் ! 'டெங்கு' வை கட்டுப்படுத்த தீவிரம்

போலீஸாருக்கு  நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டது போல அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுபோல அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிலவேம்புக் கஷாயம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவிக்கொண்டிருக்கும்  ஏதோ ஒரு காய்ச்சலை,  'டெங்கு' காய்ச்சல்தான் என்று ஒப்புக்கொள்ளும் சூழ்நிலைக்கு தமிழக  சுகாதாரத்துறை வந்துள்ளது. 'சுகாதாரத்துறை தமிழகத்தில்  சீரழிந்துகிடக்கிறது' என்று எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் சுட்டிக்காட்டும் போதெல்லாம், "வீண் வதந்தி பரப்ப வேண்டாம், அவதூறு வழக்குப் பாயும்" என்று எச்சரிப்பதை மட்டுமே ஆட்சியாளர்கள் கடைபிடித்தனர். அண்டை மாநிலமான கேரளாவில் 'டெங்கு' பாதிப்பால் மக்கள்  அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இன்னும் அங்கே இயல்பு நிலை திரும்பவில்லை. மக்களுக்கு வந்திருப்பது 'டெங்கு' காய்ச்சல்தான் என்பதை ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டுவிட்ட கேரள அரசு, அதற்கேற்ற மருத்துவ சிகிச்சைகளை வேகமாகவே தொடங்கிவிட்டது.தமிழகத்தில் 'டெங்கு'  காய்ச்சல் இல்லை என்று திரும்பத் திரும்ப அரசு சொல்லி வந்த வேளையில்,  சென்னையில் 4 போலீஸாரும், பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் 'டெங்கு' காய்ச்சலுக்கான சிகிச்சைபெற்றுவருகிறார்கள். சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் அரசு மருத்துவமனைகளில், காய்ச்சல் பிரிவில் மட்டுமே ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் ஏற்படத் தொடங்கியுள்ளது.  

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி