தமிழக புதிய பாடத் திட்டத்தில், அமெரிக்க, ஜெர்மனியின் தொழில்நுட்ப கல்வியை சேர்க்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 14 ஆண்டு களாக மாற்றப்படாத,பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் உட்பட, அனைத்து வகுப்புகளின் பாடத்திட்டத்தையும் மாற்ற, அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
மதிப்புமிகு செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், உயர்மட்ட மற்றும் கலைத்திட்ட குழுக்கள் அமைத்து, பாடத்திட்டத்தை புதுமைப்படுத்தும் பணி துவங்கி உள்ளது. இதற்காக, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளியை ஒருங்கிணைப்பாளராக நியமித்து, பாடத்திட்ட பணிகள் நடந்து வருகின்றன
மாநிலம் முழுவதும், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்பு கூட்டம், ஆலோசனை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துக்களை பெற, பள்ளிகளில் கருத்தறியும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.பாடத்திட்ட மாற்றத்திற்காக, புதிய இணையதளமும் விரைவில் துவங்கப்பட உள்ளது.இந்நிலையில், புதிய பாடத்திட்டம் குறித்து, சர்வதேச, தேசிய அளவிலான பல்வேறு பாடத்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள முக்கிய அம்சங்கள் தொகுக்கப்பட்டு, புதிய பாடத்திட்டங்கள் விரைவில் சேர்க்கப்பட உள்ளன.
இதில், அமெரிக்கா, ஜெர்மனி நாடுகளின், தொழில்நுட்ப கல்வியை இடம்பெற வைக்கலாம் என, கல்விக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். கணினி அறிவியல், தகவல் தொடர்பு, அடிப்படை மின்னணு தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் போன்ற அம்சங்கள், வெளிநாடுகளின் பள்ளி பாடத் திட்டங்களில் இடம் பெற்றுள்ளன.
இந்த பாடங்கள், தமிழக பாடத்திட்டத்திலும் இடம் பெற உள்ளன. இதன் மூலம், தமிழக புதிய பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், பிளஸ் 2 முடிக்கும் முன், என்ஜினியரீங், அடிப்படை பாடத்தை தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.
புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்திற்க்கு முக்கியத்துவம் தந்து 6ம் வகுப்பிலிருந்து கொண்டுவருதனால்
அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அமையும்,இதில் கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்ற 40000கணினி ஆசிரியர்களுக்கும் வாய்ப்பை அமைத்து தரவேண்டும் மாண்புமிகு தமிழக அரசு..
செல்வி ராங்கநாயகி,
மாநில மகளிர் அணி தலைவி ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.
இதல்லாம் நம்பறமாதிரியாங்க இருக்கு..
ReplyDeleteவேலை இல்லாதவனை வெறுப்பு ஏத்தி பார்க்கும் உங்களுக்கு வாழ்த்து
ReplyDeleteVery Ture Brother
Deleteபிச்சை எடுத்தவனை அடிச்சி புடுங்கி திங்கர கூட்டம் தானே இது
ReplyDeleteSumma kadupethathinga my lord
ReplyDeleteCs padichitu Enga polapu pitchai edukatha kurai
ReplyDeleteBe positive....
ReplyDeleteThis is the third message regarding computer teacher posting....
ReplyDelete1. 745 computer teachers through TRB (no Recruitment )
2. 6029 schools computer staff for office (no Recruitment)
now this is 3rd one 40000 B.Ed computer Staff (May be this too rumour)