இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகில், எங்கும் கணினி, எதிலும் கணினி என்ற சூழல் உருவாகியுள்ளது. மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியில் இருந்தே கணினி கல்வியை அளித்தால் பள்ளிப் படிப்பை முடிக்கும்போது அவர்கள் அடிப்படை கணினி அறிவு மிக்கவர்களாக இருப்பார்கள்.
கணினிக் கல்வி வசதியான, தனியார் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு கிடைத்துவிடுகிறது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. காரணம் அங்கு கணினி அறிவியல் பாடமும் கிடையாது. சொல்லித்தருவதற்கு கணினி ஆசிரியரும் கிடையாது.
எனவே, தனியார் பள்ளி களுக்கு நிகராக அரசுப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக 6 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வழங்குவதற்காக அச்சடிக்கப் பட்ட பாடப்புத்தகங்களை அவர் களுக்கு வழங்க வேண்டும். தற்போது அந்த புத்தகங்கள் யாருக்கும் பயனின்றி பாடநூல் கழக குடோன்களிலும், கல்வித் துறை அதிகாரிகளின் அலுவலகங்களிலும் கிடக்கின்றன.
அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற ஏழை மாணவர்களும் கணினி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காககவும் இதை வலியுறுத்துகிறோம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.
வெ.குமரேசன்,மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி