பள்ளிக்கு போடா மவனேன்னு
வம்படியா இழுத்து வந்து
உன் கிட்ட விட்டாக
மூக்கொழுகி நின்னப்ப
என் சிலேட்டுல
கைபிடிச்சி ஆ வரைஞ்ச
ஆசானே
நெனப்பால நிக்குதைய்யா
தூக்கத்துல எழுப்புனாலும்
அந்த மனப்பாடம் மறக்கலய்யா
கழுத வயச நான் கடந்தும்
எனக்கு வாத்தின்னா உன் நெனப்பு
மறக்காம தோணுதப்பு
மனுசனா மாத்த நீ பட்ட பாடு பெரும்பாடு
அடிச்சும் சொன்ன அணைச்சும் சொன்ன
அதால தான் எப்பவுமே மனசுல நின்ன
உன் மத்தியான சோறுலயும் பங்கிட்டு தருவ
தாயா பதிஞ்ச உன் உருவ
தவறியும் மறக்கல நான் குருவே
எப்போதும் உன்ன பத்தி தான் இருக்குது என் பேச்சு
நீ தானய்யா என் முன்னேற்ற மூச்சு
இது நீ வளத்த புள்ள பேசும் பேச்சு
ஒன்னால ஒசந்து இருக்கேன் மெய்யா
ஒரு வார்த்தையும் சொல்லல நான் பொய்யா
எப்பவுமே என் குருவே நீதானய்யா.
அழகான வரிகள்,ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அய்யா
ReplyDeleteஅனைத்து ஆசிரியர்களுக்கும்
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துக்கள்
அனைத்து ஆசிரியர்களுக்கும்
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteSema super....
ReplyDeleteSema super....
ReplyDeleteTODAY IS TEACHERS DAY CONGRATULATIONS TO ALL TRS THE MOST POWERFUL OF YOUR SACRIFICE AND SERVICE THANK YOU BY BATRIC
ReplyDeleteCongratulations wish u happy teachers day
ReplyDeleteகவிதை நல்லா இருந்திச்சி அப்பு!
ReplyDeleteவாசித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி நல்லுள்ளங்களே
ReplyDelete