இணைய அழைப்புகளுக்கு இணையாக மொபைல் அழைப்பு கட்டணங்களை குறைக்க வேண்டும்: டிராய் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2017

இணைய அழைப்புகளுக்கு இணையாக மொபைல் அழைப்பு கட்டணங்களை குறைக்க வேண்டும்: டிராய் வலியுறுத்தல்

மொபைல் அழைப்பு கட்டணங்களை குறைக்க வேண்டும் என டிராய் வலியுறுத்தியுள்ளது. தொலைபேசி கட்டணங்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்)  அழைப்பு இணைப்பு கட்டணத்தை 14 காசுகளில் இருந்து 6 காசாக குறைத்து அறிவித்தது.
ஒரு நிறுவன தொலைபேசி எண்ணில் இருந்து மற்றொரு தொலைபேசி எண்ணுக்கு அழைக்கும்போது, அழைப்பை பெறும் நிறுவனத்துக்கு இந்த கட்டணம் செலுத்தப்படுகிறது. இதை குறைத்ததன் மூலம் மொபைல் அழைப்பு கட்டணங்களை குறைக்க வேண்டிய நிலைக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையில், வாடிக்கையாளர்களின் மொபைல் அழைப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என டிராய் வலியுறுத்தியுள்ளது. வாட்ஸ் ஆப், ஸ்கைப், ஹைக் போன்றவற்றில் இணைய இணைப்பை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். டேட்டா பேக்கேஜ் இருந்தால் போதும். இலவசமாகவே பேசலாம். சாதாரண போன் அழைப்புகளுடன் ஒப்பிடும் போது இவற்றுக்கான செலவு நிமிடத்துக்கு ஒரு காசுக்கும் குறைவுதான்.
 ஆனால், சாதாரண போன் வைத்திருப்பவர்கள் நிமிடத்துக்கு குறைந்த பட்சம் 30 முதல் 35 காசு செலவிட வேண்டியுள்ளது. சாதாரண போன் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள நிலையில், இவர்கள் மீது கட்டண சுமையை திணிப்பது நியாயமல்ல. எனவே, இணைய அழைப்புகளுக்கு இணையாக அழைப்பு கட்டணங்களை குறைக்க வேண்டும் என டிராய் வலியுறுத்தியுள்ளது.

* வாட்ஸ்ஆப், ஸ்கைப்பில் பேச நிமிடத்துக்கு ஒரு பைசாவுக்கு மேல் செலவில்லை.
* சாதாரண போன் வைத்திருப்பவர்கள் நிமிடத்துக்கு குறைந்தது 30 பைசா செலவிடுகின்றனர்.
* ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களை விட, சாதாரண போன் வைத்திருப்பவர்கள் அழைப்புக்கு கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி