‘பிம் ஆப்' பயன்படுத்தினால் ‘பெட்ரோல், டீசல்’ விலையில் சலுகை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2017

‘பிம் ஆப்' பயன்படுத்தினால் ‘பெட்ரோல், டீசல்’ விலையில் சலுகை!

உலகளவில் கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கின்றது.

ஒரு பக்கம் தினமும் பெட்ரோல் விலையினை மாற்றி அமைக்கத் துவங்கியதில் இருந்த தான் இந்தப் பெட்ரோல் உயர்வு அதிகமாக இருக்கின்றது என்று பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


எண்ணெய் நிறுவனங்கள்
இப்படி அதிகமாக விலை கொடுத்து பெட்ரோல், டீசல் வாங்குவதில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.
 

பிம் செயலி
மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் பிம் செயலி மூலமாகப் பெட்ரோல், டீசல் வாங்கும் போது கட்டணத்தினைச் செலுத்தினால் 41 பைசா முதல் 49 பைசா வரை குறைவாகப் பணம் செலுத்தினால் போதும்.

 

ஏடிஎம் வாடிக்கையாளர்கள்
இந்தக் கட்டண குறைப்புப் பிம் செயலி பயன்படுத்துபவர்கள் மட்டும் இல்லாமல் டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திச் செலுத்தும் போதும் பெறலாம்.
 

எவ்வளவு விலை குறைப்பு?
பிம் செயலி அல்லது ஏடிஎம் கார்டுகள் மூலம் பெட்ரோல் வாங்கும் போது லிட்டர் ஒன்றுக்கு 49 பைசாவும், டீசல் வாங்கும் போது லிட்டர் ஒன்றுக்கு 41 பைசாவும் குறைவாக வசூலிக்கப்படும்.

 

அமெரிக்காவின் புயல்
அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் காரணமாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி பதிப்பு ஏற்பட்டு விலை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
 

மத்திய அரசு
அதனால் மத்திய அரசு கலால் வரியைக் குறைக்கும் முடிவை எடுத்துள்ளது. நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி புதன்கிழமை அரசு பொதுநலச் செலவினங்களுக்காக வளர்ச்சி மற்றும் சமூகத் துறை திட்டங்களுக்கு நிதி தேவை என்று கூறினார்.
 

வரி
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் என இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு வாட் செஸ் எனப் பெடோரிலய பொருட்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளன. அன்மையில் தமிழகத்தின் எடப்படி ஆரசு பெட்ரோல், டீசல் மீது வாட் வரியை உயர்த்தி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தீபாவளி முதல் விலை குறையும்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்தரப் பிரதான் அவர்கள் வருகின்ற தீபாவளி முதல் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி