தியாகத்தை போற்றும் பக்ரீத் பெருநாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2017

தியாகத்தை போற்றும் பக்ரீத் பெருநாள்


பெருமானார் (ஸல்) மதீனா நகர் வந்தபோது, மதீனாவாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்கான காரணங்களை வினவியபோது, ‘‘நாங்கள் விளையாடுவதற்காகவும், பொழுதுபோக்குவதற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம்’’ என்றார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் அவ்விரண்டு பெருநாளுக்குப் பதிலாக அவ்விரண்டைவிடச் சிறந்த நாட்களைவழங்கியுள்ளான். அவை: ஒன்று ஈதுல் அள்ஹா! (குர்பானி வழங்கும் தியாகத் திருநாள்!) மற்றொன்று ஈதுல் ஃபித்ர்! (ஈந்து உவக்கும் ஈகைப் பெருநாள்!)’’ என்று அறிவித்தார்கள் என அனஸ் ரளியல்லாஹுஅன்ஹு தெரிவித்தார்.ஈதுல் அள்ஹா, இறை ஆணைப்படி நபி இப்ராஹீம் அவர்கள் தம் மகன் இஸ்மாயீல் அவர்களை இறைவனுக்காகப் பலியிட முன்வந்த இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும்பெருநாளாகும். குர்பானி கொடுக்கப்படுவதால் ஈதுல் அள்ஹா என்று கூறப்படுகிறது. பெருநாளன்று ஒவ்வொரு முஸ்லிமும் குளித்துப் புத்தாடை புனைவது நபிவழியாகும். ஆடை அணிவதில் ஆடம்பரம் கூடாது.

தொழுகைக்குச் செல்லும் முன்பு இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குளித்துவிட்டுச் செல்வார்கள். இரு பெருநாட்களுக்கும் ஆடைகளில் மிக அழகான ஆடையை உடுத்துபவர்களாக இருந்தார்கள்.பெண்களும் பெருநாள் தொழுகைக்காக ஈத்காஹ் என்னும் மைதானம் சென்று தொழுது வரவேண்டும். அவர்கள் ஆண்களுடன் கலக்காது தனியாக ஒதுங்கிச் செல்லவேண்டும். பெருநாள் தொழுகை அவசியமானது. பெருநாள் தொழுகை வலியுறுத்தப்பட்டது.

 இது கட்டாயத்தொழுகை என இமாம்கள் கூறுகின்றனர்.பெண்கள் சிறுவர்களின் மீதும் கடமை. மாதவிடாய், பிள்ளைப்பேறு, ரத்தப்போக்கு ஏற்பட்ட பெண்கள்கூட பெருநாள் தொழுகை நடைபெறும் முஸல்லா ஈத்காஹ் திடலுக்கு வருகை தந்து பங்கேற்பதும், அங்கே நடைபெறும் குத்பாப் பேருரையைக் கேட்பதும் நபிவழியாகும். பெண்கள் தொழாமல் அங்கே அமர்ந்திருக்கலாம்.பெருநாள் தொழுகைக்கு சிறுவர்களையும் அழைத்துச்செல்ல வேண்டும். நபி (ஸல்) அவர்கள், சிறுவராக இருக்கும்போது பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 975)

- ஸதகத்துல்லாஹ் ஹஸனி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி