Sep 4, 2017
Home
kalviseithi
Flash News:நவம்பர் 17-க்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்த வேண்டும் - சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவு
Flash News:நவம்பர் 17-க்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்த வேண்டும் - சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவு
நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அறிக்கையை செப்டம்பர் 18-க்குள் இணையதளத்தில் வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை 2 வாரத்தில் வெளியிடவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரிய வழக்கில் இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வேட்பாளர்களின் தகவல்களை இணையதளத்தில் பதிவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2016 அக்டோபரில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க. அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தது.
உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் நியமனத்தை எதிர்த்தும், அவர்களது பதவிக் காலத்தை நீட்டிக்க கூடாது எனவும் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர், நாராயணன் மனு தாக்கல் செய்தார். உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்தக் கோரி, தி.மு.க., தரப்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் படி நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommanded News
Related Post:
8 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்பு ஏதேனும் பணி நியமனம் நடக்குமா?????
ReplyDeleteKandipa nadakkathu. 1 voteku evlo perum pesalanu alosanaithan nadakkum
DeleteKandipa nadakkathu. 1 voteku evlo perum pesalanu alosanaithan nadakkum
DeletePG TRBKU PANNIRUVANGA.BUT TET DOUBT THAN.BECAUSE THIS IS NOT MLA ELECTION.
ReplyDeleteEpadi irunthalum admk varakoodathu.
Deleteஏற்கனவே நடந்த தேர்தல்ல நிறைய செஞ்சி தள்ளிட்டானுங்க. இனி அடுத்த தேர்தல் என்ன புடுங்குவானுங்கனு தெரியல இனி இது மட்டும் தான் செய்தி வேற ஒன்னும் இருக்காது. இதை எல்லாம் எவன்கேட்டான்.
ReplyDeleteஇனி எந்த அறிவிப்பும் வராது அவஅவன் தேர்தல் வேலையில் தான் இருப்பான்.
ReplyDeleteHI HI HI
ReplyDelete