NIOS EXAM : அரசு பள்ளி ஆசிரியர்கள் +2 மதிப்பெண் ஆய்வு செய்ய உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2017

NIOS EXAM : அரசு பள்ளி ஆசிரியர்கள் +2 மதிப்பெண் ஆய்வு செய்ய உத்தரவு

இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் ௨ மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர்கள் பலர் கலக்கமடைந்து உள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவைஎன, வலியுறுத்தப்பட்டது.
அதனால், தகுதித் தேர்வு முடிக்காத, லட்சக்கணக்கான ஆசிரியர்களை, பணியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது.இந்த பிரச்னையை தீர்க்க, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி, மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும், தேசிய திறந்த நிலைப் பள்ளியில், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பில், ௨௦௧௯க்குள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்னரே பணியில் சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரம், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக உள்ளவர்கள், பிளஸ் ௨வில், ௧,௨௦௦ மதிப்பெண்ணில், குறைந்தபட்சம், ௫௦ சதவீதமான, ௬௦௦ மதிப்பெண்ணாவது பெற்றுள்ளனரா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆய்வின் முடிவில், ௫௦ சதவீத மதிப்பெண் பெறாத ஆசிரியர்களை மட்டும், தேசிய திறந்தநிலைப் பள்ளியில், 'டிப்ளமா' கல்வியியல் படிப்பில் சேர்க்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.

இந்த நடவடிக்கையால், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். மேலும், ௫௦ சதவீத மதிப்பெண் கூட பெறாமல், குறுக்கு வழியில் யாரும் ஆசிரியர் படிப்பு முடித்தனரா என்றும், கல்வித் துறையில் விசாரணை துவங்கி உள்ளது. அதனால், 'பிளஸ் ௨ சான்றிதழ் சரிபார்ப்பு கூடாது' என, தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி