பகுதிநேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை நசுக்கும் அதிகாரிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2017

பகுதிநேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை நசுக்கும் அதிகாரிகள்.


பகுதிநேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் கடந்த 2012 ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கல்வி துறை பணிபுரிந்து வருகிறார்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு கடந்த 2008 ஆம் வருடம் அரசாணை எண் : 151 யை பிறப்பித்து உள்ளது அதில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது மேலும் அந்த அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க அரசின் ஏதேனும் விதிகள் தடையாக இருந்தால் அந்த விதியை அரசு செயலரின் ஒப்புதல் பெற்று அதை நீக்கி மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்கலாம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அவர்களிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அரசாணை எண் : 151 படி பகுதிநேர மாற்றுத்திறனாளிகளை காலமுறை ஊதியத்தில் மாற்றும் வழிமுறைகள் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அவர்கள் அன்னார் பணிபுரியும் பள்ளியின் மூலமாக உரிய வழியாக முன்மொழிவு அனுப்பினால் அரசுக்கு கோரிக்கை அளித்து பரிசீலிக்க முடியும் என்று பதில் அளித்துள்ளார்கள் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அவர்களின் கடிதத்தை கொண்டு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு முன்மொழிவு அனுப்பமுதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது அந்த கோரிக்கையை முதன்மைக்கல்வி அலுவலகம் நிராகரித்துவிட்டதுமாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்துடன் கல்வியை கற்று கடினமான இன்றைய சூழலில் பணிக்கு சாதிக்க வேண்டும்என்ற துணிவுடம் பணிக்கு சென்றால் மாற்றுத்திறனாளிகளின்உரிமையை ஒடுக்கும் நோக்கத்துடன் அரசு அதிகாரிகள் செயல்படுவது மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும் மத்திய அரசு தற்பொழுது நிறைவேற்றி உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய மசோதாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை உடனடியாக தீர்வு காண குறைதீர் ஆணையம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது மத்திய அரசு உடனே மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் ஆணையம் அமைத்து மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை தர மறுக்கும் அதிகாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுத்து அவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி