தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்குவது குறித்து, முதல்வரிடம் பேசி, அமைச்சரவை கூடி கொள்கை ரீதியாக முடிவு செய்யும் என பள்ளிக்கல்விஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: போட்டிதேர்வு பயிற்சி மையங்கள் உள்ள நுாலகங்களில் முதலில் நுழைவு தேர்வுக்கான பயிற்சி மையங்கள் துவங்கப்படும்.
தொடர்ந்து பள்ளிகளிலும் நடத்தப்படும்.கல்வி தொடர்பாக, மாணவர்களுக்கு பயன்படும் புத்தகங்களை மட்டுமே, நுாலகங்களுக்கு வாங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்குவது குறித்து முதல்வரிடம் பேசி அமைச்சரவை கூடி கொள்கை ரீதியாக முடிவு செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Winners pg trb coaching centre.computerscience,next class:8.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722
ReplyDeleteஐயோ,
ReplyDeleteவிளையாட்டு மைதானம் சீரமைக்கப் போகிறோம்,
நூலகம் வைக்கப் போய்கிறோம்,
ஆய்வகம் அமைக்கப் போய்கிறோம் என்ற வார்த்தைகளைக் கேட்கும் போது
" காதில் தேன் வந்து பாய்வது "போல இருக்கிறது.
ஆனால்,
மத்திய அரசின் நவோதயா பள்ளிக்கு இடம் கொடுப்பதற்கு அனுமதிக்க யோசிக்கின்றோன்.
என்று கூறும் போது,
" காதில் தேள் கொட்டப் போவது " போன்ற வலி ஏற்படுகிறது.
உடனே,
ஏன் இலவசமான , அனைவருக்கும் சமமான கல்வியை புறக்கணிக்கின்றீர்கள்????என்ற கேள்வி எழுப்பப்படும்.
இலவசமான , சமமான கல்விக் கொள்கை கண்டிப்பாக யாரும் எதிர்க்கவில்லை.
அது மாநிலக் கல்வி கொள்கையாகயிருந்தால் மட்டுமே,
நமது சுயத்தை மேம்படுத்துவதாக இருக்கும்.
மாநிலத்தின் கையில் யிருப்பது அப்பா, அம்மா கையில் இருப்பது போன்றது,
மத்திய அரசின் கையில் இருப்பது என்பது
பெரியப்பா, பெரியம்மா கையில் யிருப்பது போன்றது.
அவர்கள் உண்மையாகவும், நேர்மையாகயிருந்தால் தான் நமக்கு நன்மையும், பயனும் கிடைக்கும்.