பள்ளி சுவர்களில் சித்திரம்:வரையும் பணிகள்’விறுவிறு’ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2017

பள்ளி சுவர்களில் சித்திரம்:வரையும் பணிகள்’விறுவிறு’

அனைவருக்கும் கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், தமிழகம் முழுவதும், 2,184அரசுப்பள்ளிகளில், சுவர் சித்திரம் வரைய, கடந்த செப்டம்பர் மாதம், 3 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில், 132 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, சுவர் சித்திரம் வரையும் திட்டத்திற்கு, தலா 15 ஆயிரம் ரூபாய் விதம், 19.50 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது.ஆங்கில வழி வகுப்புகள் கொண்ட அரசுப் பள்ளிகளில், இரண்டு வகுப்பறைகளில் சித்திரங்கள் வரைய அறிவுறுத்தப்பட்டது. ஆங்கில வார்த்தை உச்சரிப்பு பயிற்சிக்காக, தாவரங்கள், விலங்குள், பறவைகள், அன்றாடநிகழ்வு சார்ந்து, 16 சுவர் ஓவியங்கள் வரைய மாதிரி படங்கள் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.சிறந்த ஓவியர்கள் கொண்டு, இப்பணியை விரைந்து முடித்து, கற்பித்தல் பணிகளை துவங்குமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் கூறுகையில், ’அதிக மாணவர்கள் படிப்பதோடு, இடவசதி கொண்ட, அரசுப்பள்ளிகளில் மட்டுமே, சுவர் சித்திரங்கள் வரையப்படுகின்றன. இதற்கான, நிதி பள்ளிகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.ஓவியங்கள் வரையும் பணிகள், முடியும் தருவாயில் உள்ளதால், தினசரி வகுப்பறையில் படங்கள் கொண்டு, உச்சரிப்பு பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்’ என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி