வித்யா லட்சுமி' இணையம் விழிப்புணர்வு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2017

வித்யா லட்சுமி' இணையம் விழிப்புணர்வு!!

கோவை: மத்திய அரசு, ’வித்யா லட்சுமி’ எனும் இணையதளத்தை கடந்த, 2015ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி, www.vidyalakshmi.co.in எனும் கல்விக்
கடன் பெறுவதற்கான இணையதள முகவரியை, பெரும்பாலான மாணவர்களிடம் கொண்டு செல்ல ஏதுவாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.மத்திய நிதி துறை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் சார்பில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்கும், ஏழ்மை மற்றும் நடுத்தர மாணவர்கள் எந்தவொரு இடையூறு இல்லாமல் கல்விக் கடன் பெறமுடியும்.இந்த இணையதளத்தின் முக்கியத்துவத்தை, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அந்த வகையில், கல்வி நிறுவனங்களின் இணையதளம், வலைதளம் உள்ளிட்டவற்றில் வித்யா லட்சுமி இணையதள முகவரியை தெரியப்படுத்த வேண்டும் என, பல்கலை மானியக்குழு செயலர் தாகூர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி