கற்றல் விளைவுகள் குறித்து, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான, கற்பித்தல் பயிற்சி வகுப்பு, வரும் 3ம் தேதி துவங்குவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கற்பித்தல் பயிற்சிகள், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. மாணவர்களின் கற்றல் நிலையை ஆய்வு செய்ய, 'கற்றல் விளைவுகள்' என்ற தலைப்பில், இருநாள் பயிற்சி, சமீபத்தில் வழங்கப்பட்டது.
இதில், தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு மட்டும் பங்கேற்றனர். இதற்கிடையில், இரண்டாம் பருவத்தேர்வுகள் துவங்கியதால், பயிற்சி வகுப்புகள் தள்ளி வைக்கப்பட்டன. விடுமுறைக்கு பின், வரும் 2ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படுகின்றன.எனவே, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, அரசு நடுநிலைப்பள்ளி கணிதம் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான, கற்பித்தல் பயிற்சி வகுப்புகள், வரும் 3ம் தேதி துவங்கி, 4ம் தேதியுடன் நிறைவடைகிறது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, இரு நிலைகளாக பிரித்து, 8ம் தேதி முதல், 11ம் தேதி வரை, பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. வட்டார வள மையங்களில், இப்பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்யுமாறு, மாநில திட்ட இயக்குனர் நந்தக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி