சிம் கார்டுகளுக்காக வழங்கப்படுகிற ஆதார் எண்களைப் பயன்படுத்தி, ஏர்டெல் பேமென்ட்ஸ் பாங்க் இதுபோன்று வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளது. 23 லட்சம் பேரின் ஏர்டெல் பேமென்ட்ஸ் பாங்க் கணக்குகளில், வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல், ரூ.47 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.
சமையல் கியாஸ் மானியம் உள்ளிட்டவை கூட வாடிக்கையாளர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படாமல், ஏர்டெல் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் ஆதார் ஆணையத்துக்கு சென்றதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில் இது உண்மை என்று தெரியவந்ததை அடுத்து, ஏர்டெல் நிறுவனத்தின் இ-கேஒய்சி (e-KYC -Electronic Know Your Customer) உரிமத்தை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை செல்போன்களுடன் இணைக்கும் பணியை ஏர்டெல் நிறுவனம் மேற்கொள்ள முடியாது எனக் கூறப்படுகிறது.
காரணம் தெரிந்து கொள்ளுங்கள்:
ஆதார் அடிப்படையிலேயே மானியங்கள் உங்கள் வங்கிக் கணக்கிற்குள் அனுப்பி வருகிறது சர்க்கார்.
என்னதான் மூன்று நான்கு கணக்குகள் உங்களுக்கு இருந்தாலும், உங்கள் வங்கிக் கணக்கை ஒரே ஒரு கணக்குடன்தான் மானிய விஷயங்களுக்கு இணைக்க முடியும்.
நீங்கள் அதை செய்து விட்டீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், அதன் பின்தான் ஏர்டெல்லின் சூத்திரம் வேலை செய்கிறது.
ஆதாரை மானியக் கணக்குடன் இணைத்த பிறகு, ஏர்டெல் உங்களது கணக்கைத் தன்னுடன் தொடங்குகிறது. அப்போது உங்களது மானியக் கணக்கு கடையாக ஆரம்பித்த ஏர்டெல்லின் கணக்காக ஆட்டோமேட்டிக்காக மாறி விடுகிறது.
KYC இல்லாமல் வங்கிக் கணக்குத் தொடங்க முடியாது. ஆனால் ஏர்டெல் சிம் கார்ட் வாங்கும்போது கொடுத்த KYC யையே அவர்கள் சர்க்காரிடம் காட்டி விடுகிறார்கள்.
நீங்கள் அறியாமல் உங்களது மானியம் ஏர்டெல் கணக்கில் சேர்ந்து, அவர்கள் அதை இஷ்டம் போல உபயோகிக்கிறார்கள்.
உங்களது மானியத் தொகை வரவில்லையே என்று தேடும்போதுதான் உங்களது ஏர்டெல் கணக்கிற்கு அனுப்பி விட்டதாக பதில் வரும்.
இந்த முறை விழித்துக் கொண்ட நீங்கள் ஏர்டெல்லைக் கேட்கும் போது 'சாரி, தவறுதலாக இங்கே வந்து விட்டது' என சமாளிப்பார்கள். பின்னர் அந்தப் பணத்தை திரும்ப வாங்க பிரம்மப் பிரயத்தனப் படவேண்டும்.
இதைத் தவிர்க்க உள்ள ஒரே ஒரு வழி, எத்தனை மெசேஜ்கள், கால்கள் வந்தாலும் ஏர்டெல்லோடு ஆதாரை இணைக்காதீர்கள்.
இந்த ஆதார் இணைப்பு விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் உங்களை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது.
நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்கலாம். இணைப்பை அவர்களால் துண்டிக்க முடியாது.
அப்படி ஒரு நிலை வந்தால், நீங்கள் ஏர்டெல்லை விட்டு நெம்பர் போர்ட்டபிலிட்டி மூலம் வேறு கம்பெனிக்கு வெளியேறி அதே நெம்பரை தக்க வைத்துக் கொள்ளலாம்.
உச்ச நீதி மன்றமே, உயர் நீதிமன்றமோ,
ReplyDeleteஎந்த நீதித்துறையும் மக்களுக்கு ஆனது என்றால் ,
எவ்வளவு ஏற்றத்தாழ்வு , சாதி மத வேறுபாடு , பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்தும் மக்கள் என்றால் ஜனநாயக நாட்டில் அனைவரும் சமம் என்பது உண்மையெனில்,
முதல் குடிமகனாகிய, குடியரசுத் தலைவர்,
பிரதம மந்திரி , அனைத்து அமைச்சர்கள், M.P's , அனைத்து மத்திய அரசுத் துறைகளின் ஊழியர்களான I. A. S, IPS முதல் கடைநிலை ஊழியரான cleark வரை உள்ளவர்களும் , அதே நேரத்தில் அனைத்து மாநிலங்களில் உள்ள முதலமைச்சர், ஆளுநர் முதல் அமைச்சர்கள், M. L.A's , அனைத்து மாநில ஊழியர்களான மாநகராட்சியிலிருந்து அனைத்து மாநிலத் துறை கடைநிலை ஊழியர்கள் வரை உள்ள மக்கள் வரிபணத்தை பெற்று ஊழியம் செய்யும் அனைவரும் முன் உதாரணமாக ,
தங்கள் PAN Card, phone No, மற்றும் நீங்கள் கூறுகின்ற வங்கி கணக்கு போன்ற அனைத்தையும் ஆதாருடன் இணைத்து ஒரு எடுத்துக்காட்டாக இன்நாட்டு மக்களுக்கு திகழ வேண்டும்.
பின்பு
சத்துணவுக்கு, இலவசத்திற்கு நிற்கும் சாமானிய மக்கள் ஆதாருடன் இணைக்க வேண்டியதை இணை் க்க வேண்டும் என்று உத்தரவு போட்டால் அவர்களுக்கும் புரியும் அரசு செயல் திட்டமும் சென்று சேர வேண்டியவர்களைச்சேர்கின்றது என்று பயமில்லாமல் நலத்திட்டத்தை அறிவிக்கலாம். செயல்படுத்தலாம்.