பிளஸ் 2 பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் இன்று முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2018

பிளஸ் 2 பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் இன்று முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், தத்கல் முறையில் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்.

நிகழ் கல்வியாண்டில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதவுள்ள தேர்வர்கள் கடந்த டிசம்பர் 11 -ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தத் தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் டிசம்பர் 18 முதல் 20 -ஆம் தேதி வரை ரூ.1,000 அபராதத்துடன் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.


இந்த நிலையில், இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய தேர்வர்கள் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தனித்தேர்வர்கள், வியாழக்கிழமை (ஜன.4) முதல் சனிக்கிழமை (ஜன.6) வரை அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இணையதள மையங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியாது.

அரசுத் தேர்வு சேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணத் தொகை 'ரெஜிஸ்ட்ரேஷன் ஸ்லிப்'பில் குறிப்பிடப்பட்டிருக்கும். 'எச்' வகை தனித்தேர்வர்களுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35; எச்.பி. வகை நேரடித் தனித்தேர்வர்களுக்கு ரூ.150, இதர கட்டணம் ரூ.37 என மொத்தம் ரூ.187 தேர்வுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1,000 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50-ஐ ரொக்கமாக மட்டுமே அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்தில் செலுத்த வேண்டும் என அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி