அரையாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் நாளன்று 3-வது பருவத்துக்கான இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 8-ம் தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, அரையாண்டு விடுமுறையும் அதோடு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையும் ஜனவரி 1-ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 9 நாள் விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 3-வது பருவத்துக்கான (ஜனவரி முதல் மார்ச் வரை) புத்தகங்கள், பள்ளி திறந்த முதல் நாள் அன்றே வழங்கப்பட்டன.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சுகன்யா கூறும்போது, “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான 3-வது பருவ பாடப்புத்தகங்கள் முன்கூட்டியே மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலமாக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மாணவர்களின் வசதியை கருத்தில்கொண்டு முதல் நாளன்று அவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. தமிழகம் முழுவதும் 24 லட்சத்து 39 ஆயிரத்து 372 மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 56 லட்சத்து 52 ஆயிரத்து 742 பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன” என்றார்.
ஜன. 18 முதல் திருப்புதல் தேர்வு
அரையாண்டுத் தேர்வு முடிவடைந்த நிலையில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் முதலாவது திருப்புதல் தேர்வு ஜனவரி 18-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைகிறது. இதற்கான காலஅட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வெளியிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி