புதிதாக பரவும் ஆண்ட்ராய்டு வைரஸிடம் இருந்து, கணக்கு விவரங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.
தற்போது வங்கி பரிவர்த்தனைகள், 'ஆன்-லைன்' மூலம் எளிதாகிவிட்டன. வங்கி 'ஆப்' பயன்படுத்தி, மொபைல்போன் வாயிலாக பரிவர்த்தனை செய்ய முடிகிறது.இந்நிலையில், 'ஹேக்கர்கள்' தற்போது, வங்கி மொபைல் 'ஆப்'ஐ செயலிழக்க செய்யும் வகையில், 'மால்வேர் தீம்' வைரஸ் உருவாக்கியுள்ளனர். 'ஆண்ட்ராய்டு.பேங்கர்.ஏ-9480' என, இந்த வைரஸூக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மொபைல் போனில்இந்த வைரஸ் நுழைந்து விட்டால், வங்கி அப்ளிகேஷன் விவரங்கள், தொடர்பு எண்கள், ஹேக்கர்கள் வசம் சென்றுவிடும். இதை பயன்படுத்தி, வங்கி கணக்கில் இருந்து தொகையை, எளிதாக டிரான்ஸ்பர் செய்து விடலாம். வாடிக்கையாளர் பாதுகாப்புக்காக, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வங்கிகள் அனுப்பும், 'ஒருமுறை கடவுச்சொல்' (ஓ.டி.பி.,) தகவலை, ஹேக்கர்களுக்கும் பிரதியெடுத்து அனுப்பிவிடும்.தற்போது வேகமாக பரவிவரும் இந்த வைரஸிடம் இருந்து, ஸ்மார்ட் போனை பாதுகாப்பாக வைத்து கொள்ளுமாறு, வங்கிகள்,வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு செய்தி அனுப்பி வருகின்றன.அதில், 'வங்கி செயலிகளை குறிவைத்து தாக்கும், 'தீம்' பொருள் பரவி வருகிறது; வாடிக்கையாளர்கள், பாதுகாப்பாக இருக்கவேண்டும்' என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வைரஸ் குறித்த விவரங்களை உள்ளடக்கிய லிங்க், வங்கிகள் தரப்பில் அனுப்பப்பட்டு வருகிறது.எனவே, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர், தேவையற்ற அப்ளிகேஷன்களை உடனடியாக நீக்கிவிட வேண்டும்.
வேறு இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து, அப்ளிகேஷன்களை நிறுவக்கூடாது. 'கூகுள் பிளே ஸ்டோர்' அல்லது 'ஆப்ஸ் ஸ்டோரில்' இருந்து மட்டுமே செயலிகளை நிறுவ வேண்டும். நிறுவப்பட்டிருக்கும் வைரஸ் எதிர்ப்பு செயலிகளை, முறையாக, 'அப்டேட்' செய்து, இப்பிரச்னையில் இருந்து தப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி