மொபைல் போனில் இனி அரசு சேவைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2018

மொபைல் போனில் இனி அரசு சேவைகள்

தமிழக அரசு, 'எம் - கவர்னென்ஸ்' என்ற, மொபைல் போன் வழி, இணைய சேவைகளுக்கு இனி முக்கியத்துவம் அளிக்கவுள்ளது. அதன்படி, அனைத்து துறைகளும், இணையதளங்களில் தக்க மாற்றங்களை செய்வதுடன், மொபைல் போன் செயலிகளையும் உருவாக்கவுள்ளன.
அனைத்து அரசு சேவைகள் மற்றும் திட்டங்கள் போன்றவற்றை,பொது சேவை மையங்கள் மூலம் தருவதற்கு, மத்திய அரசு, தேசிய அளவிலான கொள்கை வகுத்துள்ளது. அதையொட்டி, தமிழக அரசும், அதன் திட்டங்கள் மற்றும் சேவைகள், மக்களை வேகமாக சென்றடையும் வகையில், ஐ.டி., என்ற, தகவல் தொழில்நுட்ப துறைக்கு, தனி கொள்கை வெளியிட்டுள்ளது.அதன் விபரம்:ஐ.டி., சட்டம், 2000ல், அனைத்து அரசு சேவைகளும், மின்னணு முறையில் மக்களுக்கு தரப்பட வேண்டும். அதன்படி, வரும், 2023க்குள், அரசு சேவைகள் அனைத்தும், இ - சேவை மையங்கள் வாயிலாகவும், பல்வேறு இணைய பயன்பாடுகள் வாயிலாகவும், மக்களுக்கு தருவதற்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், மொபைல் போன்கள் பெருகியுள்ளதால், 'எம் - கவர்னென்ஸ்' என்ற, மொபைல் வழி சேவைகளை அதிகரிக்க வேண்டியுள்ளது.

 எனவே, மொபைல் போன் வழியாக, அரசு சேவைகளை மக்களுக்கு வழங்க, அனைத்து அரசுத் துறைகளும் ஊக்குவிக்கப்படும்; மொபைல் போனில் பயன்பாடுகளை பெறும்வகையில், அந்தந்த துறையின், இணையதள தொழில்நுட்ப அமைப்புகள் மாற்றி அமைக்கப்படும். அதற்கேற்ப, மொபைல் செயலிகள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி