பத்து, பன்னிரண்டாம் வகுப்பு - தமிழுக்கு இரண்டுதாள் தேவையா? - kalviseithi

Jan 30, 2018

பத்து, பன்னிரண்டாம் வகுப்பு - தமிழுக்கு இரண்டுதாள் தேவையா?

அன்பான தமிழ் ஆர்வமிக்கவர்களுக்கு,வணக்கம்.

வரும் கல்வியாண்டுமுதல் புதிய பாடத்திட்டம் வருகிறது. அதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
தெரியாத ஒன்று, மதிப்பீடு.மதிப்பீட்டைப் பொறுத்தவரை பத்து, பன்னிரண்டாம் வகுப்புக்குத் தமிழில் இரண்டுதாள்கள் காலங்காலமாக வைக்கப்பட்டு வருகின்றன.இரண்டுதாள் எழுதுவதற்குக் கடினமாகவும், திருத்துவதற்கு அதிக தாளும், அதிகநேரமும் ஆவதாகவும் கருத்து நிலவுகிறது.தமிழ் ஆசிரியர்கள், விடைத்தாள் முகாமில் வைக்கும் ஒரு கோரிக்கை, ஒரு தாள்போதுமானது என்பதுதான்.

மாணவனின் மொழித்திறனுக்காக இரண்டுதாளும் இருக்கட்டும் என்று ஒருசில சாரார் கூறுவதும் ஏற்கத்தக்கதே.எட்டாம் வகுப்பு வரை வழக்கமான வினாத்தாள் வடிவம் போதுமானது என்றும், ஒன்பது முதல் பன்னிரண்டு வகுப்புவரைகொள்குறி தேர்வு அடிப்படையில் வினாத்தாள் (100 மதிப்பெண்) அமைக்கப்பட்டால் நலம் என்ற கருத்து உலவுகிறது.

அதனடிப்படையில் கீழே காணும் படிவத்தை நிரப்பி, தங்கள் மேலான கருத்தைப் பதி்விடுங்கள். இந்தக் கருத்துக்கணிப்பானது, பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஊடகங்களின் மேலான பார்வைக்கு வைக்கப்படும்.எனவே, இதை எல்லோருக்கும் பகிருங்கள்… யாவரும் பங்கேற்று இக்கருத்துக்கு உதவுங்கள்.

நன்றி,
திரு. தாமோதரன்

3 comments:

  1. Need to consider this. Language paper became more stress to students. Higher secondary students write four language papers. Tamil 1 & 2, English 1&2. They write totally 8 papers. If it is reduced to 6 means students will be stress free. Let them them write single paper and be stress free.

    ReplyDelete
  2. இரண்டு தாள் இருப்பதே மொழியறிவை மேம்படுத்த உதவும்.இலக்கண அறிவை வளர்க்க முக்கியத்துவம் தரவும்

    ReplyDelete
  3. compulsarily necessary to attain and improve basic language skills.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி