மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு கல்வி அளிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2018

மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு கல்வி அளிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள விருப்பம் உள்ள 9, 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு உணவு பதப்படுத்துதல், சிறுவணிகம், வாகனம்சார் திறன், உடல் நலம் பேணுதல், வனப்பு மற்றும் உடல் நலம் போன்ற தொழில் திறன்களை ஆசிரியர்கள் கற்பிக்க உள்ளனர்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

4 comments:

  1. புதிய பாடத்திட்டதில் கணினி சம்மந்தமான பாடதிட்டம் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக SCERT கூறி இருந்தது. ஆனால் புதிய வரைவு பாடத்திட்டதில் கணினி சார்ந்த பாடங்கள் அறிமுகம் செய்யவில்லை. தற்போது SCERT புதிய பாடத்திட்டதில் கணினி பாடம் சேர்ப்பது அரசு கொள்கை முடிவு என்று கூறுகிறது. தமிழக மக்கள் அனைவரையும் SCERT ஏமாற்றுகின்றது. புதிய பாடதிட்டதில் கணினி பாடங்கள் சேர்க்க எடுத்த நடவடிக்கை பின்பு எப்படி அரசு கொள்கை முடிவாகும். அரசு முடிவு செய்த பின்பு தானே SCERT முயற்சிகள் மேற்கொண்டு இருக்கும். கணினி அறிவியல் பாடம் அறிமுகம் செய்வது மற்றும் 765 காலி கணினி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்புவது பற்றி அரசு எந்த ஒரு தெளிவான முடிவும் இதுவரை எடுக்கவில்லை. வெறும் வாய் வார்த்தைகளாகவே உள்ளன. இவ்வாறு இருக்கும் பள்ளிக்கல்வி துறை CBSE க்கு இணையான பாடத்திட்டம் பாடத்திட்டம் என கூறிகொள்வது மிகவும் வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  2. பி.எட் கணினி பட்டதாரிகள் 55000 மேற்பட்ட எங்களுக்கு முதலில் உங்கள் துறையில் ஆசிரிய பணி கொடுங்கள். பிறகு வர போகும் சந்ததி பற்றி பேட்டி கொடுங்கள். 55 ஆயிரம் பட்டதாரிகளின் வாழ்க்கை கேள்வி குறி ஆக்கி விட்டது. தமிழ முன்னால் மற்றும் இந்நாள் அரசு புரட்சி தலைவி தங்க தாரகை இதய தெய்வம் அண்ணா நாமம் எம்ஜிஆர் நாமம் செய்வீர்களா வாழ்க வாழ்க் அ இ அ தி மு க. ஏழு ஆண்டுகளாக எங்கள் வாழ்வாதார்த்தை இழக்கச்செய்த அரசு. வாழ்க வாழ்க.

    ReplyDelete
  3. இவ்வளவு நிதி ஒதுக்குற அரசு கணினி பாடத்தை 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தனி பாடமாக கொண்டு வந்து 55000 மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்த நிதி இல்லையா. எங்கே அரசு பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு திறமையான கணினி ஆசிரியர்களை நியமித்தால் தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விடும் என்ற அச்சத்தால் அரசு பள்ளியில் கணினி பாடதிற்க்கு முக்கியதுவம் அரசு வழங்க வில்லையோ என தோன்றுகிறது. மேல் நிலை வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு இலவச மடிகணினி கொடுக்கின்றது. ஆனால் அதனை திறன் பட சொல்லித்தர ஆசிரியர் இல்லை. மேலும் ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆய்வகம் ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் என குறைந்த ஊதியத்தில் 55 ஆயிரதிற்க்கும் மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளை நிரந்தர பணியில் சேர்க்க செய்ய வேண்டும். கணினி பாடங்களை இவர்கள் இந்த புதிய ஆய்வக உதவியுடன் மாணவர்களுக்கு சொல்லி கொடுத்தால் மாணவர்களுக்கு முழுமையான கல்வி சென்றடயும். அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிகணினி வழங்கும் செலவை விட அனைத்து பள்ளிகளிலும் ஆய்வகம் மற்றும் ஆசிரியர் ஏற்பாடு செய்வது குறைந்த செலவு மற்றும் நிறைந்த கல்வி ஆகும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி