காலியாக இருக்கும் பணியிடங்களை நீக்க முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2018

காலியாக இருக்கும் பணியிடங்களை நீக்க முடிவு!

கடந்த ஐந்தாண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாகஇருக்கும் பணியிடங்களை நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகள் இயங்கிவருகின்றன.
அவற்றில் உள்ள காலி பணியிடங்களால்ஒழுங்கான முறையில் செயல்பாடுகள் நடைபெறுவது இல்லை.

இந்த நிலையில், இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அனைத்து துறைகளுக்கும் ஜனவரி 18ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், ஐந்தாண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு காலியாக இருக்கும் பணியிடங்களைக் கண்டறிந்து நீக்குவது குறித்து அமைச்சகங்கள், துறைகளின் நிதி ஆலோசகர்கள், நிர்வாகச் செயலாளர்கள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சில துறை அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.சிலரின் பதில்களுக்காகக் காத்திருக்கின்றனர். விரைவில் அனைத்து அதிகாரிகளும் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்ட மதிப்பீட்டில் கடந்த ஐந்தாண்டுகள் மற்றும் அதற்கும்மேலாக பல ஆயிரம் மத்திய அரசு பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது என உள்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

2 comments:

  1. இவ்வளவு நிதி ஒதுக்குற அரசு கணினி பாடத்தை 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தனி பாடமாக கொண்டு வந்து 55000 மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்த நிதி இல்லையா. எங்கே அரசு பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு திறமையான கணினி ஆசிரியர்களை நியமித்தால் தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விடும் என்ற அச்சத்தால் அரசு பள்ளியில் கணினி பாடதிற்க்கு முக்கியதுவம் அரசு வழங்க வில்லையோ என தோன்றுகிறது. மேல் நிலை வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு இலவச மடிகணினி கொடுக்கின்றது. ஆனால் அதனை திறன் பட சொல்லித்தர ஆசிரியர் இல்லை. மேலும் ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆய்வகம் ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் என குறைந்த ஊதியத்தில் 55 ஆயிரதிற்க்கும் மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளை நிரந்தர பணியில் சேர்க்க செய்ய வேண்டும். கணினி பாடங்களை இவர்கள் இந்த புதிய ஆய்வக உதவியுடன் மாணவர்களுக்கு சொல்லி கொடுத்தால் மாணவர்களுக்கு முழுமையான கல்வி சென்றடயும். அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிகணினி வழங்கும் செலவை விட அனைத்து பள்ளிகளிலும் ஆய்வகம் மற்றும் ஆசிரியர் ஏற்பாடு செய்வது குறைந்த செலவு மற்றும் நிறைந்த கல்வி ஆகும்

    ReplyDelete
  2. மேலும் ஒரு சந்தேகம்,
    ஐயா,
    இருக்கின்ற கிராமப்புற , நகர்புற பள்ளிகளை மேம்படுத்தி,
    முறையான (இடியாத நிலை, வெள்ளையடித்த நிலை, மரம், செடி வளர்க்கப்படக் கூடிய நிலை)கட்டிட வசதி,
    முறையான (குடிக்க ) குடிநீர் வசதி
    +
    முறையான (கழுவ ) கழிப்பிட வசதி,
    முறையான (update செய்து கொண்டே இருக்கக் கூடிய) நூலக வசதி,
    முறையான (அதிகம் இல்லையென்றாலும் தேவையான நான்கு முக்கிய விளையாட்டு சாதனப் பொருட்கள் கொண்ட நிலை) விளையாட்டு மைதான வசதி,
    மற்றும்
    மேல் & உயர் நிலைப்பள்ளிகள் என்றால்
    கண்டிப்பாக
    முறையான (பராமரிப்புடன் கூடிய) ஆய்வக வசதி போன்றவற்றை மேன்படுத்துவதற்கு மத்திய அரசு உதவுவதை விட்டு,
    நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதையே முனைப்பாக இருக்கின்றது.
    இது ஏன் என்று புரியவில்லை.
    இருக்கின்ற தனியார் பள்ளிகளை கிளைகள் கொண்டு வளர்ந்து நிற்கின்றது.
    ஆனால் |
    1952 அல்லது அதற்கு பின் காமராஜர் காலத்தில் லிருந்து திராவிட ஆட்சி வரை
    முன்னேற்றம் கண்ட
    தமிழக கல்வித்துறை
    சமூக நீதியில், இலவச திட்டங்கள் மூலம் மட்டும் கண்டிப்பாக ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டு உள்ளது.
    மற்றொரு முக்கியமான ஒன்று
    தாய்மொழிக் கொள்கை மற்றும் இரு மொழிக் கொள்கை இதன் மூலம் நமது தனின் தன்மை இழக்காமல் உள்ளோம் என்பது உண்மை.
    ஆனால்
    வளர்ச்சிப் பாதையை கடக்க வேண்டுமெனில் செல்ல வேண்டிய பாதை நெடுந்தூரமாக உள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி