கல்வி இணையதளம் உயிர்ப்பிக்கப்படுமா?கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு | kovaischools.net - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2018

கல்வி இணையதளம் உயிர்ப்பிக்கப்படுமா?கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு | kovaischools.net

கோவை:மாவட்ட கல்வி இணையதளத்தை, 'அப்டேட்' செய்யவும், அரசுப்பள்ளிகளுக்கு பிரத்யேக, 'புரோபைல்' உருவாக்கவும், புதிய முதன்மைகல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்விசார் திட்டங்கள், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கடந்த 2015ல், சி.இ.ஓ.,வாக இருந்த அருள்முருகன் முயற்சியால், kovaischools.net என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டது.
இதில், கோவையில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் எண்ணிக்கை, அரசு உயர்கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்கள், முகவரி, பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கான புகைப்படங்கள், முக்கிய கல்வி இணையதளங்கள் குறித்த, பல்வேறு தகவல்கள் பார்வையிடும் வசதி உள்ளது. ஆனால், முறையாக இத்தகவல்கள், 'அப்டேட்' செய்யப்படாததால், தற்போது இணையதளம் முடங்கியுள்ளது.

குறிப்பாக, மாவட்ட கல்வி அலுவலர் குறித்த பகுதியில், பழையசி.இ.ஓ., கணேஷ்மூர்த்தியின் புகைப்படமே உள்ளது. புதிதாக பொறுப்பேற்ற சி.இ.ஓ., அய்யண்ணன் குறித்த தகவல்கள் இல்லை. மாவட்ட கல்வி அதிகாரியாக, பணி ஓய்வு பெற்ற தேன்மொழியின், பெயரே நீடிக்கிறது.இவருக்கு பின்,டி.இ.ஓ.,வாக இருந்த வஜனா, தற்போது பதவி உயர்வு பெற்றதால், புதிய டி.இ.ஓ.,வாக கீதா பொறுப்பேற்றுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், நடப்பு கல்வியாண்டில் நடந்த, மாநில அளவிலான தனித்திறன் போட்டி, மாவட்ட கலையருவி திட்ட போட்டிகளின் புகைப்படங்கள் கூட, இணையதளத்தில் இடம்பெறவில்லை.தனியார் நீங்கலாக, மற்ற உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தொடர்பு எண், இ-மெயில் முகவரி மட்டுமே உள்ளது. இணையதளம் உருவாக்கப்பட்ட பின், சில அடிப்படை தகவல்கள் மட்டுமே, அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகின்றன. இந்த இணையதளத்தை பார்வையிடுவதால், எந்த புதிய தகவல்களையும், பொதுமக்களால் தெரிந்து கொள்ள இயலாது என்பது, கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.கல்வியாளர்கள் கூறுகையில், 'மாவட்ட கல்வி இணையதளம் உருவாக்கிய போது, ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கு பின், புதிய தகவல்கள், அப்டேட் செய்யப்படவில்லை.
பாரம்பரியம் மிக்க அரசுப் பள்ளிகளுக்கு, பிரத்யேக புரோபைல் உருவாக்குவதோடு, மாதந்தோறும் நடந்த நிகழ்வுகளை அப்டேட் செய்யலாம்.இது, பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாகவும், அரசுப்பள்ளிகள் மீது, புதிய நம்பிக்கையை விதைப்பதாகவும்இருக்கும்,' என்றனர்.

1 comment:

  1. *💢 கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை: How Many Candidates Have Registered Their BT Assistant Qualification With Employment Office As on 31/12/2017. CM CELL REPLY.*


    💢https://kaninikkalvi.blogspot.in/2018/01/how-many-candidates-have-registered.html?m=1

    🔖More News- kaninikkalvi.blogspot.in

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி