தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்கள் அவசர செலவுகளுக்கு 25 சதவீதம் வரை எடுத்துக்கொள்ள அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றாக, தேசிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதில் பயனாளிகள்செலுத்திய தொகைக்கு ஏற்ப பென்ஷன் தொகை வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர்ந்தவர்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், பென்ஷன் சந்தாதாரர்களின் வசதிக்காக விதிகளில் தளர்வுசெய்து ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, மேற்கண்ட ஓய்வூதிய திட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு சந்தா தொகை செலுத்தியவர்கள், அந்த நிதியில் 25 சதவீதத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு எடுத்துக்கொள்ளலாம்.அதாவது, குழந்தைகளின் உயர் கல்வி, அவர்களது திருமணம், வீடு, நிலம் வாங்குதல், புற்றுநோய்,சிறுநீரக கோளாறு, பைபாஸ் உள்ளிட்ட இதய நோய் அறுவை சிகிச்சைகள், பக்கவாதம் போன்றவற்றுக்காக தனது நிதியில் இருந்து பணம் அடுக்க அனுமதி உண்டு.3முறை மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்த முடியும். அதேநேரத்தில், முதல் முறை வீடு வாங்குவதற்காக மட்டுமேஇந்த சலுகை உண்டு.
மற்றபடி, பரம்பரை சொத்து தவிர சந்தாதாரர் தனது பெயரில் அல்லது கூட்டாக சொந்த வீடு, பிளாட் இருந்தால் இந்த சலுகை கிடைக்காது என ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி