வரும் கல்வி ஆண்டு முதல் SC-ST மாணவிகளுக்கு ஊக்கத்தொகையை கைவிட மத்திய அரசு முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2018

வரும் கல்வி ஆண்டு முதல் SC-ST மாணவிகளுக்கு ஊக்கத்தொகையை கைவிட மத்திய அரசு முடிவு

எஸ்.சி. - எஸ்.டி.  மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதால் நாடு முழுவதும் 8 லட்சம் மாணவிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது.
2008-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் படி 8-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3000 அளிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினை வரும் கல்வி ஆண்டு முதல் கைவிட மத்திய அரசு முடிவு எடுத்திருக்கிறது. இதனால் நாடு முழுவதும் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் மட்டும் 70,000 மாணவிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி