பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2018

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்க உத்தரவு

தமிழகம் முழுவதும், பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும்படி, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும்.
இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்டபிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.

முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி