நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் 13 ஆயிரம் பேர் பணி நீக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2018

நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் 13 ஆயிரம் பேர் பணி நீக்கம்

திருச்சி கோட்டத்தில் தண்டவாளப் பராமரிப்பாளர்களாக பணியாற்றும் அனிதா மோல், பொண்ண சீனிவாச ராவ்(தஞ்சை), சில்பா சந்திரன், ரவீந்திர பிரசாத்(குடந்தை), லெட்சுமி, தீபா, ராஜிகுமாரி, பவுசியா(திருவாரூர்) என எட்டு என்ஜினியரிங் பிரிவு ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
உதவி பணியாளர் அலுவலர் கிருஷ்ணன் இவர்களை பணி நீக்கம் செய்து உத்தரவு  வெளியிட்டு உள்ளார். அனைவரும் 2016, 2017ம் ஆண்டுகளில் பணிக்கு சேர்ந்த வெளி மாநிலத்தவர்கள். இதில்  ஐந்து பேர் பெண் ஊழியர்கள்.  அனைவருமே பட்டப்படிப்பு முடித்தவர்கள்.

தண்டவாளப் பராமரிப்பு என்பது வெயில், மழை பார்க்காமல் பணியாற்ற வேண்டிய உடல் உழைப்பு சார்ந்த வேலை. வேலைக்கு வந்த சில மாதங்களில் படித்த இளைஞர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் வேறு வேலைக்கு சொல்லாமல் சென்று விடுகின்றனர். சில ஊழியர்கள் விடுப்பில் சொந்த ஊருக்கு சென்றால் திரும்பி வர மனம் இல்லாமல் அங்கேயே தங்கிவிட்டு பல மாதங்கள் கழித்து திரும்பி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் இவர்களிடம் தற்போது கடுமை காட்ட துவங்கி இருக்கிறது.  பணி நீக்கம் செய்யப்பட்ட ரயில்வே ஊழியர்கள், குடியிருப்புகளை காலி செய்து உடனே வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணை பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகையில், ரயில்வே ஊழியர்கள் நன்னடத்தை விதிகளின்கீழ் எந்த ஊழியரையும் விசாரணை இன்றி வேலை நீக்கம் செய்யக்கூடாது. தற்போது பணி நீக்கப்பட்டதில் மூன்று பெண் மற்றும் ஒரு ஆண்  ஊழியர்கள் மட்டுமே வேறு வேலைக்கு சென்று இருக்கிறார்கள். மற்ற நான்கு ஊழியர்களை திரும்ப வேலைக்கு எடுக்க வேண்டும். இந்தியா முழுவதும் 13,000 ரயில்வே ஊழியர்கள் இவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். விசாரணை இன்றி ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி