பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2018

பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம்

ஐதராபாத்: தெலுங்கானாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், 2018 - 19 கல்வியாண்டுமுதல், தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா, அம்மாநில சட்டசபையில் நிறைவேறியது.
மசோதா தாக்கல் : தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. தெலுங்கு மொழியை வளர்க்கும் நோக்கத்தில், இங்குள்ள அனைத்துப் பள்ளிகளிலும், 1 - 10ம் வகுப்பு வரை, தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாக்க திட்டமிடப்பட்டது. தெலுங்கானா துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான, கடியம் ஸ்ரீஹரி, இந்தமசோதாவை, நேற்று முன்தினம், சட்டசபையில் தாக்கல் செய்தார்.ஒருமித்த ஆதரவு : அனைத்துக் கட்சினரின் ஆதரவுடன், மசோதா, ஒரு மனதாக நிறைவேறியது. இதையடுத்து, வரும் கல்வியாண்டில் இருந்து, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், தெலுங்கு, கட்டாயப் பாடமாக்கப்படுகிறது.

தெலுங்கு மொழி தெரியாதவர்களின் நலன் கருதி, சி.பி.எஸ்.இ., உட்பட, இதர பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில், இப்போதைக்கு, 1 - 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்தெலுங்கு பாடம் கட்டாயமாக்கப்படுகிறது.இந்த முடிவுக்கு, அனைத்து எதிர்கட்சிகளும், ஆதரவு தெரிவித்து உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி