உண்ணாவிரத போராட்டத்தில் மயங்கி சாயும் ஆசிரியர்கள்.. 108 ஆம்புலன்சில் மருத்துவமனைகளில் அனுமதி!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2018

உண்ணாவிரத போராட்டத்தில் மயங்கி சாயும் ஆசிரியர்கள்.. 108 ஆம்புலன்சில் மருத்துவமனைகளில் அனுமதி!!




ஒரே பணிக்கு ஒரே ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 2012-ஆம் ஆண்டுக்கும் முன்பும் பின்பும் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய விகிதத்தில் முரண்பாடு இருப்பதாகவும், அதனை உடனடியாக களைய வலியுறுத்தியும் சென்னை டிபிஐ வளாகத்தை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் போராடிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ராஜரத்தின ஸ்டேடியத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டனர். ஆனால் ஆசிரியர்கள் அங்கும் தங்களது கொள்கைகளை வலியுறுத்தி காலை 6 மணி முதல் உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். விடிய விடிய ஆசிரியர்கள் நடத்திய வரும் இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
நேரம் செல்ல செல்ல ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்து வருகிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே 2 நாட்களாக ஆசிரியர்கள் பட்டினி போராட்டம் காரணமாக, ஒருவருவராக மயங்கி விழுந்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட 19-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து மயங்கி விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மயங்கிவிழுந்தவர்கள் அனைவரும் உடனடியாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி