2வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்: 29 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2018

2வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்: 29 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி


ஊதியம் முரண்பாடுகளை நீக்கக்கோரி சென்னையில் 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்  2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
உணவு, குடிநீர் இல்லாததால் 29க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2009ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த தொடக்ககல்வி ஆசிரியர்கள் 2000க்கும் மேற்பட்டோர் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கிளனர். 2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களை விட அதற்கு பின்னர் சேர்ந்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை குறைவான சம்பளமே கிடைப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரே கல்வி தகுதியுடன் ஒரே பணியை செய்து வரும் நிலையில் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இங்குள்ள ஆசிரியர்களுக்கு எந்த வசதிகளும் செய்து தராமல், அவர்களை வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அனுமதியுடன் ஆசிரியர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாத காரணத்தினால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாத காரணத்தினால் 29ம் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி