தனியார் பள்ளியில் 25 சதவீத சேர்க்கையால் அரசுப் பள்ளிகள் விரைவில் மூடப்படும் அபாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2018

தனியார் பள்ளியில் 25 சதவீத சேர்க்கையால் அரசுப் பள்ளிகள் விரைவில் மூடப்படும் அபாயம்

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு அளிக்கப்படும் 25 சதவீத சேர்க்கையால் அரசுப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் ஏழை மாணவர்கள் 25 சதவீதம் பேரை தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்க வேண்டும். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற நலிந்த மாணவர்களை, அவர்கள் விரும்பும் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்க வேண்டும்.

கடந்த ஆண்டு அரசு நிதி ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை அரசுப் பள்ளிகளுக்கு செலவு செய்திருந்தால் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. இந்த செயல்முறையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 comment:

  1. நான்கு வருட தொடர் போராட்டங்களுக்கு பின் நமது பணிக்காக இறுதிகட்ட போராட்டம் விரைவில் நடத்தவிருப்பதால் 2014 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க... 9791565928, 6382872993.
    மு.குமார் தேனி.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி