பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை சேகரிப்பு முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2018

பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை சேகரிப்பு முகாம்

கோடை விடுமுறையை முன்னிட்டு 3 நாள் அஞ்சல் தலை சேகரிக்கும் முகாமை தபால் துறை நடத்த உள்ளது. சென்னை நகர தலைமை போஸ்ட் மாஸ்டர் வெளியிட்ட அறிக்கையில்கூறியுள்ளதாவது:
6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் 27ம் தேதி வரை, மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை, மே 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை, 16 முதல் 18 வரை, மே 23ம் தேதி முதல் 25ம் ேததி வரை என 5 பிரிவுகளாக அஞ்சல் தலை சேகரிப்பு முகாம் நடைபெறும். இந்த 3 நாட்களும் மாணவர்களுக்கு அஞ்சல் துறையின் செயல்பாடு, அஞ்சல் தலைகள் பயன்பாடு, அஞ்சல் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும்.

இதற்காக கட்டணம் ரூ.250. அண்ணா சாலை தலைமை தபால் நிலைய வளாகத்தில் இந்த முகாம் நடைபெறும். அண்ணா சாலை தபால் நிலைய வளாகத்தில் இதற்கான விண்ணப்பத்தை பெறலாம். www.chennaipost.gov.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பம் உள்ளது. இவ்வாறு கூறபப்ட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி